வெள்ளி, 12 டிசம்பர், 2008

தீ! சொல்!

தீ!
வாட்டி வதைத்து மனத்தின்கண் வீற்றிருந்(து)
ஆட்டிப் படைத்தே அறிவழித்துக் -கூட்டினை
நோயிற் பெருமளவு நோகடிக்கும் வெஞ்சினத்
தீயிற் கொடியதோ தீ?

சொல்!
சித்தெறும்பாய் ஊர்ந்து சிறுதொழிலும் செய்யாமல்
மெத்தெனவே வீற்றிருந்தால் மேன்மையுண்டோ? -நித்தநித்தம்
தேம்புவதால் இன்பம் திரண்டிடுமோ? மண்பதையில்
சோம்புவதால் உய்வுண்டோ சொல்?

அகரம்.அமுதா

4 கருத்துகள்:

  1. நேரமிருப்பின் படித்துக் கருத்து கூறவும்

    http://pattarivumpaadamum.blogspot.com/2008/11/blog-post_16.html

    பதிலளிநீக்கு
  2. http://pattarivumpaadamum.blogspot.com/2008/10/blog-post.html

    வெண்பா எழுதும் முயற்சி

    படியுங்களேன் - கருத்து கூறுங்களேன்

    பதிலளிநீக்கு
  3. i think the archive you wirte is very good, but i think it will be better if you can say more..hehe,love your blog,,,

    பதிலளிநீக்கு
  4. தங்கள் பாராட்டுக்கென் நன்றிகள்.

    பதிலளிநீக்கு