திங்கள், 14 செப்டம்பர், 2026

 

பக்தர்:-

 

ஒத்தப்பா! ஓரம் ஒதுங்கப்பா! இப்படியா

மத்தியில் நின்று வழிமறிப்பாய்? – மத்தவங்க

முந்திப்போய் சாமி முகம்காண வேண்டாமா?

ந‍ந்திபோல் நில்லாய்; நகர்!

 

முன்னாள் அமைச்சரெனில் மூலவர் ஓடிவந்து

தன்னாலே காட்சி தருவாரா? – பின்னால்போய்

மக்கள் வரிசையிலே வந்து தரிசனம்செய்;

அக்கப்போர் பண்ணா(து) அகல்!

 

சேகர் பாபு:-

 

வக்கத் தவனெல்லாம் வம்புக் கிழுத்திங்கு

நிக்காதே சீக்கிரம் நீங்குன்றான்; – சிக்கல்மேல்

சிக்கலைத் தாங்கி சிவனேன்னு நான்நின்றால்

நக்கலாச் சொல்றான், நகர்!

 

முன்னாள் அமைச்சென்றும் முன்கோபக் காரனென்றும்

சொன்னாலும் கூட சுருக்கென்று - பின்னால்

பிசாசைப்போல் வந்து பிராண்டிவிட் டென்னை

அசால்ட்டாச் சொல்றான், அகல்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக