வெண்பா!
பிள்ளை அறையினிலே
பேச்சுக் குரல்கேட்டு
வெள்ளை மனத்தப்பன்
வேர்த்தனன்; - தள்ளிநின்று
காது கொடுத்துக்
கவனம் செலுத்தினன்
ஏதுதான் பேசுகிறான்
என்று! 1
பையன் கடவுளிடம்
பையவே வேண்டினான்
ஐயனையை அப்பத்தாள்
அல்லலின்றி – வையகத்தில்
நன்றிருக்கத் தாத்தா
நலமாகப் போய்வருக
என்றிறையைக் கேட்டான்
இருந்து! 2
தன்பிள்ளை ஆண்டவனின்
தாள்கள் வணங்குதல்
நன்றென்று தந்தையும்
நம்பினான் – என்றாலும்
உள்ளுக்குள் ஏதோ
உறுத்த உறங்கினான்
நள்ளிரவும் போனது
நன்கு! 3
மாரடைப்பில் தாத்தா
மரணம் அடைந்துவிட
நீரடைந்த கண்ணொடுஊர்
நின்றிருக்க – மாரடித்துக்
காதே கிழயவப்பன்
கத்திப்பின் தேறினான்
ஏதேச்சை யாய்நிகழ்ந்த
தென்று! 4
இன்றிரவும் பிள்ளை
இறைவ னிடம்வேண்டச்
சென்றுமறைந் தப்பன்
செவிமடுத்தான்; – அன்னைதந்தை
நன்றாக வாழ்க
நமதப்பத் தாவுக்கு
நன்றியென் றானே
நலிந்து! 5
அப்பனை நன்றாக
அச்சம் பிடித்தாட்ட
இப்பொழுது தூக்கம்
இலாதொழியச் – செப்பியவாறு
அப்பத்தா செத்தொழிய
அந்தோ பரிதாபம்!
குப்பென வேர்த்தார்
குமைந்து! 6
இன்றிரவு தன்பிள்ளை
யாரைக் குறிப்பிட்டு
நன்றிசொல்வான்? என்றே
நடுங்கினான்; – சின்னவனும்
அப்பொழுது வேண்டினான்
அன்னை நலம்வாழ்க
அப்பனுக்கு நன்றியென
ஆர்ந்து! 7
மாவச்சம் தோன்ற
மருத்துவரைப் போய்ப்பார்த்தான்;
நோவெதுவும் இல்லையென்றான்
நுண்ணியனும்; – சாவச்சம்
வாட்டி வதைக்க
வருத்தத் துடனேதன்
வீட்டை அடைந்தான்
விரைந்து! 8
காலையில் வந்த
கணவன் அணைத்தழுதாள்
மாலையிட்ட மங்கை
மனமுருகி; – வேலையால்
செத்த கதைசொல்லிச்
செவ்வரிக்கண் சிந்தினளே
மொத்தமடங் கிற்றிவன்
மூச்சு! 9
மூலக்கதை!
திடீர்னு பையன் ரூம்ல ஏதோ
சவுண்டு கேக்குதுன்னு அப்பா அந்த
பக்கம் போறாரு. உள்ள பார்த்தா
பையன் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கான்..
"அம்மா, அப்பா & பாட்டி நல்லா இருக்கணும்..தாத்தாவுக்கு நன்றி"னு.
என்னடா இவன் வித்தியாசமா
வேண்டிக்கிட்டு இருக்கான்னு அவன்
அப்பாவுக்கு ஒரு டவுட் இருந்தாலும்..
ஒரு சந்தோஷம் கடவுள் பக்தியா
இருக்குறான்னு !
"மறுநாள் காலையில தாத்தாவுக்கு மாரடைப்பு வந்து இறந்துட்டாரு "..
உடனே இதை யோசித்து பார்த்த அப்பா ஒருவேளை இது எதேச்சையா நடந்திருக்கும்னு நினைச்சுக்கிட்டாரு.
மறுநாள் நைட்டும் பையன் ரூம்ல
அதே சவுண்ட் கேட்குது !
அங்க பையன் அம்மா & அப்பா நல்லா
இருக்கணும்..பாட்டிக்கு நன்றினு
சொல்லிட்டு இருக்கான்.
மறுநாள் காலையில வரைக்கும்
வெயிட் பண்ணி பார்த்தா..
"பாட்டியும் இறந்து போய்ட்டாங்க"
அப்பாவுக்கு ஒரே பயம். இன்னைக்கு
நைட்டு இவன் என்ன சொல்ல
போறான்னு ஆர்வத்தோட பையன் ரூம்ல கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சி
நின்னுட்டு இருக்குறான்.
இப்போ பையன் " அம்மா நல்லா
இருக்கணும் & அப்பாவுக்கு நன்றினு
சொன்னதும் ..இவனுக்கு வியர்க்க
ஆரம்பிச்சிட்டது
நைட் வீட்ல சரியா தூங்க முடியாம
முழிச்சிட்டு இருக்கான்.. இனி இத
இப்படியே விடக்கூடாதுன்னு உடனே
டாக்டர் கிட்ட போயிட்டு உடம்பை செக் பண்ணிக்குறான்..
டாக்டரும்.. " நீங்க நல்லா தானே
இருக்கீங்க உங்களுக்கு ஒன்னும்
ஆகாதுனு" சொல்லி அனுப்புறாரு..
வீட்டுக்கு வந்ததும் பொண்டாட்டி ஓடி
வந்துட்டு நைட்டு எங்க போனீங்கனு
பயத்தோட கேட்குறா..
" ஏன் என்னாச்சுனு இவன் கேட்க ? "
நம்ம தோட்டக்காரன் மர்மமா செத்து
போயிட்டான்னு சொல்லுறா...
" என்னடி சொல்றனு ? ஒரு பக்கம்
கோவம் ..இன்னொரு பக்கம் உயிர்
பிழைச்சோம்னு சந்தோஷம்