ஞாயிறு, 26 அக்டோபர், 2025

 எண்பத்தா றோடேஎண்

ஒன்பதைக் கூட்டினால்
ஒன்பத்தா றென்பாரே
ஓங்கோலார்; - நண்பனே!
நம்பிக்கை இல்லையெனில்
நீயே வினவிப்பார்
அம்பியைப் போல்முழிப்பார்
ஆம்!

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!


இரவில் இருவர்
இயற்றிய ஆட்டத்(து)
உறவால் ஆடத் தொடங்குகிறான் -இவன்
இறக்கும் வரையில்
இளமை தொடங்கி
இனிதே ஆடி அடங்குகிறான்!
தினவெ டுத்தவன்
தோள்கள் தளருமுன்
துடியிடை மீதே ஆடுகிறான் -மிக
உணர்ச்சி மிக்கவன்
உள்கோ பத்தை
உலவ விட்டுப்பின் வாடுகிறான்!
முகத்தின் முன்னே
முறுவ லிப்பவன்
முதுகில் குத்தி ஓடுகிறான் -தன்
அகத்தில் தீதை
ஆட விட்டவன்
அடுத்தவன் வளர்ச்சியில் வாடுகிறான்!
தனமொன் றினையே
தகுதி யென்பவன்
தப்பின் வழியை நாடுகிறான் -நற்
குணமென் பதையே
குழியில் இட்டவன்
கோபுரம் மீதே வாழுகிறான்!
சுயநல மதையே
சூத்திர மாக்கிச்
சுகக்கணக் கொருவன் போடுகிறான் -மதி
மயங்கி மதுவில்
மனதை விட்டவன்
வாழ்வை தொலைத்துத் தேடுகிறான்!
விதியின் வழியில்
விருப்ப முற்றவன்
'விதியே எல்லாம்' என்றிடுவான் -தன்
மதியி ருப்பதை
மறந்து போனவன்
வாழ்வே சுமையென வைதிடுவான்!
மோகப் போழ்தினில்
மெல்லிடை தனிலே
சொர்க்கம் கண்டவர் பலருண்டு –தன்
தேகம் தளர்கையில்
தளிரிடை யதையே
நரகம் என்பவர் சிலருண்டு!
ஆடி அடங்கும்
வாழ்க்கை இதையே
வாழ்ந்திட எவனும் கற்றானா? –உள்
ஆடும் ஆசையை
அகற்றும் ஆசையால்
ஆசையை புத்தன் வென்றானா?
பிறப்பில் தொடங்கும்
ஆட்டம் இதனை
இறப்பில் தானே முடிக்கின்றான் -உடன்
இறப்பில் இவனே
முடித்த ஒன்றை
அடுத்தவன் ஆடத் துடிக்கின்றான்!
அகரம் அமுதன்

 அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாளே... பாடல் மெட்டு

பல்லவி –
புதுப்புது அண்ணி
கெடச்சத எண்ணி
கொத்தடிமை மகிழ்ந்தானே...
உதய்அண்ணன் ஆட்சி
இருட்டுகள் சாட்சி
கவட்டையில் கவிழ்ந்தானே...
மெய்யா பொய்யா
பொய்யா மெய்யா...
சரணம் – 1
இண்ஸ்டாவே சொல்லுச் சிதுங்க
பால்டாயில் முன்வச் சதுங்க...
தினம்ஒரு நடிகையென் றானே - உதய்
தினவுக்கு சமர்ப்பணம் தானே
இண்ஸ்டாவே சொல்லுச் சிதுங்க
பால்டாயில் முன்வச் சதுங்க...
தினம்ஒரு நடிகையென் றானே - உதய்
தினவுக்கு சமர்ப்பணம் தானே
கோடிகள கொட்டிக் கொடுத்து
லேடிகள கட்டுப் படுத்து...
கோடிகள கொட்டிக் கொடுத்து
லேடிகள கட்டுப் படுத்து...
முக்காம முத்தாடு கண்ணா! - மக்க
எக்கேடு கெட்டாக்க என்னா?
முக்காம முத்தாடு கண்ணா! - மக்க
எக்கேடு கெட்டாக்க என்னா?
மெய்யா பொய்யா
பொய்யா மெய்யா...
சரணம் - 2
நீட்டையுந்தான் மறக்கடிச்சான்
நாட்டையுந்தான் கடனில்வச்சான்
தரித்திரம் மறக்கடிச்சாரு – சென்னை
தண்ணீரில் மிதப்பதைப்பாரு
நீட்டையுந்தான் மறக்கடிச்சான்
நாட்டையுந்தான் கடனில்வச்சான்
தரித்திரம் மறக்கடிச்சாரு – சென்னை
தண்ணீரில் மிதப்பதைப்பாரு
பொம்பளைக்கு பஸ்ஸுஉடணும் – அத
ஓசியின்னு பேசிவக்கணும்
பொம்பளைக்கு பஸ்ஸுஉடணும் – அத
ஓசியின்னு பேசிவக்கணும்
எவன்வீட்டு அப்பன் காசு – அடி
செருப்பால இப்பநீ பேசு
எவன்வீட்டு அப்பன் காசு – அடி
செருப்பால இப்பநீ பேசு
மெய்யா பொய்யா
பொய்யா மெய்யா...

 (உல்லாச உலகம் உனக்கே சொந்தம் பாடலின் மெட்டு)

தொகையறா
பொல்லாத கரிய நாகம்
இட்டதோர் குட்டியி னாலே
குட்டியோர் குட்டி போடக்
கெட்டதே உலகும் ஊரும்
பல்லவி
உல்லாச உலகம்
'உதய்'க்கே சொந்தம்
தய்யடா தய்யடா
தய்யடா.. - நீ ஜல்சா
செய்யடா செய்யடா
செய்யடா...
உல்லாச உலகம்
'உதய்'க்கே சொந்தம்
தய்யடா தய்யடா
தய்யடா.. - நீ ஜல்சா
செய்யடா செய்யடா
செய்யடா...
செய்யடா... செய்யடா...
செய்யடா... செய்யடா...
ஓ...ஓ...ஓ...ஓ...
செய்யடா செய்யடா
செய்யடா...
சரணம் 1
நடிக்கிற பெண்கள்
படுக்கையில் வந்து...
நடிக்கிற பெண்கள்
படுக்கையில் வந்து
கொடுக்கிற இன்பம்
கோடியடா...
அடிக்கடி நீயும்
ஆட்டத்தைப் போடு
அடுத்ததுன் ஆட்சி
இல்லையடா...
எட்டானதே...
எட்டான தேமணி
ஏந்திழை தேடு...
தய்யடா தய்யடா
தய்யடா... - நீ ஜல்சா
செய்யடா செய்யடா
செய்யடா...
சரணம் 2
அப்பனும் போட்ட
ஆட்டத்தைப் பாக்க...
அப்பனும் போட்ட
ஆட்டத்தைப் பாக்க
ஆடியோ வீடியோ
இல்லையடா...
இப்பநீ போடுற
ஆட்டத்தை நீயே
இண்ஸ்டாவில் போடுற
பிள்ளையடா...
கண்ணாரவே...
கண்ணார வேசனம்
பரசவப் படட்டும்
தய்யடா தய்யடா
தய்யடா... - நீ ஜல்சா
செய்யடா செய்யடா
செய்யடா...
சரணம் 3
நடிகைக் காக
பால்டாயில் குடிச்சா...
நடிகைக் காக
பால்டாயில் குடிச்சா
அடிமன ஆசை
ஆறிடுமா...
தொடுகிற பெண்ணை...
தொடுகிற பெண்ணை
தூரத்தில் வச்சா
தொடுதிரை யோடு
நாறிடுமா...
தம்பட்டம் போடும்...
தம்பட்டம் போடும்
தறுதலை தான்நீ
மெய்யடா மெய்யடா
மெய்யடா – நீ ஜல்சா
செய்யடா செய்யடா
செய்யடா...

 உண்மையைப் பேசிடும்

உத்தமரே! நீங்களா
பெண்களைக் கண்ணியமாய்ப்
பேணுகிறீர்? – மண்ணுக்குப்
பாரமடா நீங்கள்...
பரதேசி நாய்களே!
துரமாய்ப் போங்கடா
தூ!

புதன், 22 அக்டோபர், 2025

 (ஒரு கொத்தடிமை எப்படியெல்லாம் முட்டுக் கொடுக்கிறான் என்பதைப் பேசுகின்றன இவ்வெண்பாக்கள்)

எத்தனை மன்னிகள்...
ஈடிலாக் கன்னிகள்...
அத்தனை பேர்களும்
அண்ணிகள்... – கொத்தடிமை
கண்ணுக் கிவரெல்லாம்
காதற் கிழத்திகள்...
உண்மையில் ப்ளேபாய்
உதய்!
ராவுக் கொருத்தியை
ராவாய்ச் சுவைக்காமல்
நாவுக் கிதமில்லை...
நள்ளிரவு - நோவுக்குச்
சின்னவர் தேடும்
சிருங்காரப் பட்சிகள்பால்
மின்னல்கள் தோற்கும்
விழிக்கு!
ஆடை விலக்கி
அழகுப் பதுமைகளின்
வாடை படித்துஉதய்
வாழ்ந்திருக்க – மேடைதொறும்
முட்டுக் கொடுப்பதற்கு
முண்டி அடிப்பது
மட்டுந்தான் கொத்தடிமை
மாண்பு!
த‍த்தி தனயனைத்
தானைத் தலைவனைப்
புத்தியில் லாதோன்
புதல்வனைக் – கொத்தடிமைக்
கூட்டத்தார் ஏத்திக்
குதூகலம் கொள்வதெல்லாம்
நோட்டுக்காய்ச் செய்கின்ற
நொட்டு!
அண்ணன் உதயநிதி
அந்தப் புரத்தினிலே
அண்ணிகள்பால் செய்வதெல்லாம்
அராய்ச்சி; - பெண்கள்
கவட்டைக்குக் கீழே
கவிழ்வதில் ஒன்றும்
தவறில்லை; தாள்வீழ்தல்
தப்பு!
தம்மாத்தூண் டுள்ள
தளிரிடைப் பூம்பெண்கள்
எம்மாத் திரமென்றே
எண்ணியுதய் – கும்மிருட்டில்
போட்டானே போடு
புடவைப் புதுக்கிளிகள்
தீட்டான போதும்
திரு!
எழுச்சிமிகு நாயகா
எங்களுதய் அண்ணா
கழுத்துவரைப் பொங்குதடா
காம‍ம்... – இழுத்துக்
கவட்டையில் வைத்த
கடவுள்மேல் குற்றம்;
தவறென்ன உன்மேலா
சாற்று!
அம்மி மிதித்தே
அருந்ததி பார்த்தவள்
ம‍ம்மியாய் ஆனால்
மறுதலித்துப் – பொம்மைபோல்
பூங்கிளிபோல் உள்ள
பொதுமகளிர் நாடுவதே
ஓங்கோல் இனப்புகழென்று
ஓர்!
நொங்குண்பான் அண்ணனுதய்...
நோண்டியுண்பான் இன்பநிதி...
அங்குப்பின் மாட்டுபவன்
ஆரேன்றால்... – எங்குலக்
கொத்தடிமை தானே...
குரலை உயர்த்தியவர்
குத்தத்தை முட்டுக்
கொடுத்து!
முட்டுக் கொடுத்தே
முதுகு வளைந்தவன்..
திட்டுகள் வாங்கும்
திருடன்.. – மட்டமாய்ப்
பேண்டீஸில் மட்டுமே
பேரின்பம் காண்பவன்...
காண்டேத்தும் கொத்தடிமை
காண்!

கதையே வெண்பாவாக...



நண்பன் -
பெண்பார்க்கப் போனாயே
போவார் வருவார்தம்
கண்பார்க்கு மாறுநற்
கட்டழகா? – பெண்ணைப்
பிடிச்சிருக்கா? உன்னைப்அப்
பெண்ணிற்கும் கூடப்
பிடிச்சிருக்கா? இல்லையா?
பேசு!
பெண்பார்க்கச் சென்றவன் -
தன்னந் தனியழைத்துத்
தாவணிப் பெண்ணவள்
கன்னத்தைக் கிள்ளிக்
கடிந்தபடி – உன்போலே
ஒல்லியனே வேண்டாம்
உதைதாங்க மாட்டாய்நீ
செல்லுக! என்றாள்
சிரித்து!
பாக்கத்தான் ஆள்கொஞ்சம்
பஞ்சை; அடிஉதையின்
தாக்கத்தை நன்றாகத்
தாங்குவேன்; – வீக்கம்
வெளியே தெரியாது
வேண்டான் எனாதே
கிளியே!என் றேன்கெஞ்சிக்
கேட்டு!
என்னால் இனி ரிஸ்க்
எடுக்க இயலாது
சொன்னால்கேள் என்றாள்நான்
சோர்வுற்றேன்; – பின்பென்னைத்
தேற்றி ஒருவாறு
தேம்பி அழாய்என்று
போற்றி அனுப்பிவைத்தாள்
பூ!

வாழ்த்துப்பா!

 

தூக்கலாய் அல்லாமல்,
தொய்வேதும் இல்லாமல்,
நீக்கமற வள்ளுவத்தில்
நின்றுள்ளான்; - ஆக்கங்கள்
அத்துணையும் தேன்தான்;
அமுத குறள்தெளிய
இத்துணையே போதும்
இனி! 01
முன்னம் எழுதி
முடித்த பனுவலைத்தான்
பின்னும் எளிமை
படுத்தியுள்ளான்; – தென்றமிழர்
உள்ளத்தில் ஏந்தி
உவக்கும் திருக்குறளை
வள்ளுவன் தான்பிறந்து
வந்து! 02
உரைதேடாப் பாட்டை
உலகிற் களித்தான்
நரைகூடா முன்னம்என்
நண்பன்; – கரைகாணாத்
தீங்குறள் ஆழியைச்
சேர்ந்தே கடப்போம்யாம்
ஈங்கிவனே ஓடம் எமக்கு! 03
தோல்,சடை நீக்கிச்
சுளையை வழங்கியுள்ளான்
கால்நடையும் தின்று
களிகொள்ள; – பால்நடை
போடும் கடைப்பாலில்
போட்டான் புதுத்தேனீர்;
ஏடும்பா ராட்டும்
எழுந்து! 04
பொய்யாத் திருக்குறளைப்
புத்தம் பொருட்குறளாய்
நையப் புடைத்து
நமக்களித்தான்; – பையநம்
பாவலன் சங்கர
பாண்டியன் செய்தசெயல்
பூவள்ளிப் பூவணிந்தாற்
போன்று! 05
கடுகைத் துளைத்தேழ்
கடலைஉள் வைத்துக்
கொடுத்தானே வள்ளுவக்
கோமான் – எடுத்திவன்
ஆராய்ந் துவர்ப்பகற்றி
அக்கடுகுள் தூயநன்
நீராழி வைத்தான்
நிமிர்ந்து! 06
வில்லெடுத்தான் ராமன்;
வியந்த‍தனைப் பாடுதற்குச்
சொல்லெடுத்தான் கம்பன்;
சுகதுக்கம் – எல்லாம்
துறந்தோன் குறளெடுத்தான்;
சுந்தர பாண்டி
குறளுக் கெடுத்தான்
குறள்! 07
பொய்யா மொழிக்குப்
பொருட்குறள் வார்த்தளித்த
அய்யா உனக்கென்
அகவணக்கம் – மெய்யாக
மேனாள் கவிக்கெல்லாம்
மேலான பாவலன்நீ
ஆனானப் பட்டவன்நீ
ஆம்! 08
நொடிப்போழ்த்தில் தீங்குறளில்
நுண்ணறிவி னாலே
இடியாப்பச் சிக்கல்
எடுத்தான் – படிநீ
அறிவும் வளரும்
அகமும் மலரும்
குறிக்கோள் அடைவாய்
குளிர்ந்து! 09
கோடிஉரை கண்ட
குறளுக்குப் பூங்குறளால்
நாடிஉரை நல்கிய
நண்பனே! – கூடியுனை
வாழ்த்தட்டும் ஊருலகம்
வாழ்த்தட்டும் வானவரும்
வாழ்த்தட்டும் வள்ளுவனும்
வந்து! 10

செவ்வாய், 21 அக்டோபர், 2025

தன்படப் பித்து!


பாம்பின் கூற்று...
யார்படம் நல்லா
இருக்குதுன்னு பாத்திடுவோம்;
ஓர்படம் நானெடுக்க
ஒன்றெடுநீ; – சேர்ந்தெடுக்கும்
தன்படம் மட்டும்
தவறாகப் போனதுன்னா
பின்விளைவு மோசம்
பிளாய்!
செல்பிமோ கத்தால்நீ
செத்து விழப்போறே
நல்லப்பாம் பென்னோட
நஞ்சாலே – மெல்லமெல்லப்
பக்கத்தில் வந்து
படமெடுக்கும் ஆசையில
நெக்குருகிப் போகிறநீ
நெஞ்சு!
உன்படம் தான்டா
உனக்கொசத்தி; நானெடுக்கும்
என்படம் தான்டா
எனக்கொசத்தி; – தன்படத்தை
என்னோ டெடுங்க
எனைநெருக்கி வாராதே
உன்னோ டெனக்கில்லை
ஒட்டு!
படைநடுங்கு மன்றோ
படம்நான் எடுக்கத்
தொடைநடுங்கு மன்றோநான்
தோன்றக் – கடைவிரிச்சுச்
செல்பி எடுக்கும்
தெகிரியம் கொண்ட‍உன்மேல்
பல்பதிச்சு ஊத்துகிறேன்
பால்!



வெடிச்சது குத்தமாடா?

 

குற்றவாளி 1:-
பொட்டு வெடிதான்டா
போட்டேன்; அதுக்காக
ஜட்டியொடு உக்கார
வச்சிட்டான்; - சட்டத்தின்
முன்னால் நிறுத்திட்டான்;
முன்கதையை மாத்திட்டான்;
தண்டனை தந்துவிட்
டான்!
குற்றவாளி 2:-
மூனுநாள் உள்ளவெச்சி
மொத்தகதை மாத்திட்டான்;
ஏனுன்னு கேட்டதுக்கு
எத்துவிட்டான்; - நானுன்னைப்
போல வெடிக்கலே;
வேடிக்கை தான்பாத்தேன்;
ஆளைத்தூக் கிட்டான்
அதுக்கு!
குற்றவாளி 1:-
சுருள்காப்புத் துப்பாக்கி
சுட்டதுதப் பென்று
பொருள்காட்சி ஆக்கிட்டான்
போலீஸ்; - தெருசாட்சி
வந்துசொல்லிக் கேக்கலே;
வாண்டுன்னும் பாக்கலே;ஈ(து)
எந்தஊர் ஞாயம்
எலே!
குற்றவாளி 2:-
இப்படித்தான் கேட்டேன்
இடுப்பிலொரு குத்துவிட்டான்;
அப்படிப்போய்க் குந்தென்று
அதட்டிவிட்டான்; - உப்புபெறாச்
சின்ன விஷயத்தை
ஊதிப் பெரிசாக்கி
என்னை அடைச்சிட்டான்
இங்கு!
குற்றவாளி 1:-
ஆனை வெடிபோட்ட
ஆளைப் பிடிக்கலே;
வானவெடி வைத்தவன்
மாட்டலே; - நானெடுத்து
மூனு வெடித்திரியை
ஒன்றாக்கித் தீவைத்த
சீனிவெடிக் காடா
சிறை!?
குற்றவாளி 2:-
ஊசிவெடி வெச்சதற்கும்
ஓலைவெடி போட்டதற்கும்
நாசிவேர்க்க வந்துநின்றான்
நாங்கெடச்சேன்; - பேசிவெச்சி
வானவெடி போட்டவனை
வையம் பொளந்தவனை
ஏனரஸ்டு பண்ணல
இன்ஸு!?
குற்றவாளி 1:-
தின்றவன் தப்பிப்பான்;
நோண்டினவன் சிக்கிப்பான்;
இன்றுநேற் றல்ல
இதான்நிலைமை; - ஒன்றுதான்
காவலர் நாட்டமும்
கள்வரின் ஆட்டமும்;
சாவதெலாம் ஏழைகள்
தான்!
குற்றவாளி 2:-
தெக்குத் தெருவில்
சினேகிதி தன்வீட்டு
முக்குல் வெடித்தாள்
முனைகிள்ளி; - டக்குனுபோய்க்
கஸ்மால கான்ஸ்டபிள்
கைதுபண்ணிப் போட்டுட்டான்
புஸ்வாணத் திற்காய்ப்
புழல்!
குற்றவாளி 1:-
பொண்ணுன்னும் பாக்காம
பூவுன்னும் பாக்காம
கண்கலங்கி நிற்பதையும்
காணாம - என்ஆளு
கம்முன்னு காதலாய்க்
கைமீது வெச்சிருந்த
கம்பிமத் தாப்புக்காய்க்
கைது!
குற்றவாளி 2:-
ஆர்க்கும்காட் டாமல்
அடைப்பானோ? கொண்டுபோய்ச்
சீர்திருத்தப் பள்ளியில்
சேர்ப்பானோ? - ஊர்பார்க்க
நம்மோட போட்டோவை
நாலிடத்தில் வைப்பானோ?
கம்மனாட்டிக் கென்ன
கடுப்பு!?
குற்றவாளி 1:-
சாட்சிகள் வேண்டாமாம்;
ஜாமின் கிடையாதாம்;
காட்சிப் படுத்தாமல்
கைதுதாமாம்; - பூட்ஸ்மிதி
வாங்கத்தான் வேண்டுமாம்;
வாய்திறக்கக் கூடாதாம்;
நாம்செத்தோம்; வாய்தா
நகி!
குற்றவாளி 2:-
குண்டாஸில் வந்த,
கொலைகேஸில் உள்வந்த,
சண்டாளர் கூடநமைச்
சாடுகிறார்; - உண்மையில்நாம்
அம்மாம் பெருங்குற்றம்
அப்படி என்னசெய்தோம்?
இம்மாம் பெரிய
எதிர்ப்பு!?
குற்றவாளி 1:-
குற்ற உணர்வூட்டிக்
கேஸைநம் மேலேற்றிச்
சுற்றம் தவிக்க
ஜுரம்கூட்டிக் - கொற்றவர்கள்
கூறியதைக் கேட்கவைத்துக்
கொள்கைகளை ஏற்கவைத்துப்
பீறிடவைப் பான்நாட்டுப்
பித்து!
குற்றவாளி 2:-
ஆலைகள் மூடமாட்டான்;
ஆரண்யம் காக்கமாட்டான்;
வாலைக் கனிமவளம்
வைக்கமாட்டான்; - ஓலைவெடி
ஒன்னுரெண்டு போட்டா
ஒலகம் அழியுமென்பான்;
என்னடா சூழலியல்
இஃது!?
குற்றவாளி 1:-
சரக்கடிக்கக் காலநேரம்
சட்டத்தில் இல்லை;
சரவெடிக்குப் போட்டான்பார்
சட்டம்; - வரவரநம்
சின்ன மகிழ்ச்சியைச்
சீதச் சுதந்திரத்தைக்
கொன்றுவிட்டு ஆடுகிறான்
கூத்து!
குற்றவாளி 2:-
அவனப்பங் காசையா
ஆட்டயப் போட்டோம்?
எவனப்பங் காசை
எடுத்தோம்? - சிவனேன்னு
வீட்டுல துட்டுவாங்கி
வீதி யிலவெடிச்சா
மாட்டுவானா கையில்
விலங்கு?
குற்றவாளி 1:-
ஏட்டைய்யா பாக்குறான்
ஏத்தமா நோக்குறான்
கேட்டுட்டான் போலநம்
கேலிகளை; - வாட்டமா
மூஞ்சிய வெச்சிக்கோ
முன்னவரான் மெச்சிக்கோ
வீங்கிருமில் லேன்னா
விலா!
அகரம் அமுதன்