அமுதன் குறள்!
தலைவணக்கம்!
என்னைக் கவிபுனைய இங்கே
பணித்திட்ட
கன்னித் தமிழ்க்குவணக் கம்.
யாக்கை* எனக்கீந்த யாய்யெந்தை*
தாள்*தொழுது
நீக்கமற நின்றேன் நினைந்து.
முடிவாய் வணக்கம் மொழிந்தேன்
முருகன்
அடியார்* அவர்தாள் அணைந்து*.
யாக்கை –உடல்; யாய் –எனதுதாய்; எந்தை -எனது தந்தை; தாள் –கால்; முருகன்அடியான் -பாத்தென்றல் முருகடியான்; அணைந்து –சார்ந்து.
அவையடக்கம்!
கண்ணிலான் காசெண்ணும் காட்சியொக்கும்
எண்ணெழுத்(து)
எண்ணிநான் பாடும் இயல்பு.
மணல்திரித்துக் காற்றுகட்ட
வந்தசிறு பிள்ளைக்
குணம்பொறுப்பீர் நெஞ்சம்
குளிர்ந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக