சனி, 2 ஜூன், 2012

அமுதன் குறள்! 2


                                நூல்!

அருமைக் குழந்தாய்! பெரியவன் ஆனால்
உறக்கம் தொலையும் உறங்கு. (1)

பகலில் உறங்கும் பழக்கம் குறைப்பாய்
இரவோ(டு) உறங்கி எழு. (2)

உறங்கும் பொழுதும் விழிப்போ(டு) இருப்பாய்
உறக்கம் உடலுக்(கு) உணர். (3)

தாலாட்டுப் பாடத் தளிர்வாய் இதழ்மலர்ந்து
காலாட்டிக் கேட்டுக் களி. (4)

கருவில் விளைந்த கனியே! அழகாய்
முறுவல் உதிர்த்து முகிழ். (5)

குதலை* மொழியும் குலாவு* நகையும்
மதலை* உனக்கிவை மாண்பு. (6)

முந்தானைத் தூளியில் முப்போழ்(து) இருந்தாடி
தந்தையின் கைப்பிடித்துத் தத்து. (7)

பாட்டி கதைகூற பாட்டனார் பாவிசைக்கக்
கேட்டு விழியுறக்கம் கொள். (8)

பொய்ம்மைக் கதைகேட்டுப் போழ்தைத் தொலைக்காதே!
மெய்ம்மை அறிதலே மேல்! (9)

உலகிலே இல்லாத ஓர்பேய்க் கதைக்கும்
கலங்காமல் ‘பொய்’என்றே சொல். (10)


                     6.குதலைமழலைச்சொல்; குலாவுதல்வயப்படுத்துதல்;  மதலை -குழந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக