பாலன்ன வெள்ளியதாய்; பருவக் காற்றாய்;
பழச்சுளையின் தேன்சாறாய்; பருவ மங்கைச்
சேலன்ன வீச்சுளதாய்; தெளிந்த ஊற்றாய்;
திகட்டாத பால்மழலை செப்பும் சொல்லாய்;
காலத்தை வென்றவனாம் கவியின் ராஜன்
கண்டெடுத்த புதுமைப்பெண் போல்நி மிர்ந்தே
ஞாலத்தைக் காண்பதுவாய்; நாளும் தோன்றி
நலங்காட்டும் புதியநிலா வானில் வேண்டும்!
ஏழைக்குக் கஞ்சியுமாய்; செல்வ ருக்கும்
எட்டுகிற நிம்மதியாய்; ஆளன் இல்லாச்
சேயிழைக்குத் தூதாய்நம் வாய்ம னைவாழ்
சேந்தமிழின் இனிமையுமாய்; கேட்டு வக்கும்
யாழினிய மெல்லிசையாய்; குறளோன் பண்பாய்
யாத்திட்டச் செய்யுளுமாய்; இன்பக் கொத்தாய்;
ஏழுலகும் காணாத இன்பம் தேக்கி
இளையநிலா எழுச்சிநிலா எழுதல் வேண்டும்!
நான்காணும் திசையெல்லாம் நாடி வந்து
நல்லொளியைச் சிந்திடத்தான் வேண்டும் அந்த
வான்காணும் உயரத்தில் சிந்தை மேவி
வளமார்ந்த கவிதைகள்நான் வார்க்கும் போழ்தில்
தேன்காணும் இன்சுவையை என்றன் சொல்லில்
தேக்கிடத்தான் வேண்டும்நல் வனப்பைக் காட்டிக்
கூன்காணும் பழையநிலா போலே யன்றிக்
கொள்கைநிலா கோளநிலா எழுதல் வேண்டும்!
அகரம்.அமுதா
தமிழ் வலைப் பதிவுலக
பதிலளிநீக்குசான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்
என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.
புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய
டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.
எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட
அன்புகளுமிய அன்பர்கள்
திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்
அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி
என்றும் உங்கள்
விஜய்
கோவை.
http://pugaippezhai.blogspot.com
//தேன்காணும் இன்சுவையை என்றன் சொல்லில்
பதிலளிநீக்குதேக்கிடத்தான் வேண்டும்நல் வனப்பைக் காட்டிக்
கூன்காணும் பழையநிலா போலே யன்றிக்
கொள்கைநிலா கோளநிலா எழுதல் வேண்டும்!//
நானெல்லாம் பேசாம ப்ளாக் எழுதறத விட்டுடலாம்னு இருக்கேன்.
கேக்கறேன்னு கோவிச்சுக்காதீங்க.. "கொள்கைநிலா கோளநிலா எழுதல் வேண்டும்" ன்னா?
அந்த வரிக்கு மட்டும் ஒரு சின்ன விளக்கம் ப்ளீஸ்..
(இந்த விஜய் எல்லா பக்கமும் வந்து போஸ்டர் ஒட்டீட்டு போறாருப்பா..)
அருமையான கேள்வி பரிசல் காரரே!
பதிலளிநீக்குகுறிப்பாக இக்கவிதை சிங்கப்பூரில் பத்தாண்டுகளாக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிறுநாளின் பத்தாமாண்டு நிறைவு விழாவுக்காக (அந் நாளிதழின் பேர் புதிய நிலா) கவிதை கேட்டிருந்தார்கள்.
அந்நாளிதழ் பெயர் புதிய நிலாவல்லவா? ஆகையால் இப்புதிய நிலா புதுப்புது கொள்கைகளைத் தாங்கியும் கோளம் என்றால் வடிவமல்லவா? செம்மைமிகு அழகு வடிவத்தையுடையதாயும் வருதல் வேண்டும் என்று எழுதினேன்.
இக்கவிதையை எழுதும் போதே வானில் உள்ள நிலாவுக்கும் பொருந்துவதாயும் இத்தாளிகைக்கும் பொருந்துவதாயும் தான் எழுதினேன்.
ஆக வானிலாவைக் குறித்து இப்பாடலைப் பாடினேன் என எடுத்துக்கொண்டால் கூன்காணும் பழைய நிலா போலே யன்றி -அதாவது பிறையைப் பார்த்தீர்களே யானால் வளைந்து கூன் விழுந்தது போல்லவா இருக்கும்?
இதுபோலல்லாமல் புதுமைப் பெண்போல் நிமிர்ந்த நன் நடையுடனும்,
கொள்கைநிலவாய்-அதென்ன கொள்கை?
துணையில்லாரை இரவில் வந்துத் துன்புறுத்தாப் புதிய கொள்கையைத் தாங்கிய நிலவாகவும்,
கோளம் நிலா- (கோளம்-வட்டம்) அதாவது தேய்பிறை வளர்பிறை யறியா வட்டநிலவாகவும் வருதல் வேண்டும் என்பதே அது.
//
பதிலளிநீக்குகாலத்தை வென்றவனாம் கவியின் ராஜன்
கண்டெடுத்த புதுமைப்பெண் போல்நி மிர்ந்தே
ஞாலத்தைக் காண்பதுவாய்; நாளும் தோன்றி
நலங்காட்டும் புதியநிலா வானில் வேண்டும்!
//
பெண் தேய்ந்து வளருகிறாளா என்பது தெரியவில்லை. ஆனால் பெண்ணை நிலா என்று சும்மா சொல்லாமல், எழுச்சிமிக்க புரட்சிப் பெண்ணாய் பாடியது அருமை.
///பெண் தேய்ந்து வளருகிறாளா என்பது தெரியவில்லை.///
பதிலளிநீக்குவணக்கம் ஒளி! பெண்ணின் மார்பகங்கள் மென்மேலும் பெருத்து இடையானது மென்மேலும் சுறுங்கிக்கொண்டே போகிறதல்லவா? அதைக் குறிப்பால் உணர்த்தத்தான் அப்படி எழுதினேன். நன்றி!
உங்கள் விளக்கத்திற்கு என் நன்றியும் அன்பும்!
பதிலளிநீக்குlol,so nice
பதிலளிநீக்குநன்றிகள்.
பதிலளிநீக்கு