வியாழன், 12 ஜூன், 2008

வள்ளுவத்தை நாளும் வழுத்து!

உள்ளி மனிதர் உவந்தொழுக்கம் பேணிட
வள்ளுவர்போல் யார்சொன்னார் வந்து!

சீரடி மூன்றால்பார் தீரவளந் திட்டான்மால்;
ஈரடி போதும் இவர்க்கு!

தெள்ளியதோர் ஓடையெனத் திண்மன மாசகற்றும்
வள்ளுவத்தை நாளும் வழுத்து!

அகரம். அகரம்

5 கருத்துகள்:

  1. //உள்ளியே மாந்தர் உவந்தொழுக்கம் பேணிடவே
    வள்ளுவர்போல் யார்சொன்னார் வந்து!//

    ஆமாம் அமுதா. ஆகையால்தான் வள்ளுவர் மேல் எவருக்கும் தீராத பிரமிப்பு. அவர் தொடாத விஷயங்களே இல்லை எனலாம்.

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள் ராமலட்சுமி! வணக்கம். நீங்கள் கூறுவது உண்மைதான். வள்ளுவள் தொடாத ஒன்றில்லை. நேரமிருப்பின் என் இலக்கய இன்பம் வலைக்கும் வந்து செல்லவும். நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  3. //நேரமிருப்பின் என் இலக்கய இன்பம் வலைக்கும் வந்து செல்லவும்.//

    கண்டிப்பாக வருகிறேன் அமுதா. கூடிய விரைவில்..இலக்கியம் என்றுமே இன்பம்தான் இல்லையா?

    பதிலளிநீக்கு
  4. how can you write a so cool blog,i am watting your new post in the future!

    பதிலளிநீக்கு
  5. ///i am watting your new post in the future!///

    தங்களுடைய இந்த எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் மென்மேலும் சிறந்த கவிதைகளைப்படைக்க முயல்கிறேன். மற்றும் தங்களைப் பற்றி அறியத்தாருங்களேன். pls

    பதிலளிநீக்கு