தான்நோக்கி மெல்ல நகும்! -குறள்-
பட்டன்னப் பூவிழிகள் பார்த்திருந்தேன் பாவையவள்
சட்டென்றே தன்விழிகள் சாய்த்திருந்தாள்! -எட்டிநின்றே
என்னெழிலை உள்வாங்கிப் புன்னகைப்பாள் யானவளைக்
கண்கொண்டு காணாதக் கால்!
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து. -குறள்-
சேல்தீட்டி மைவடியச் செய்திடேன் காதலவர்
வேல்வீச்சுக் கண்ணகத்தே வீற்றுளதால் -மால்கொண்டு
தீட்டும்மை என்னவரின் தேகத்தைத் தான்மறைத்து
வாட்டுமெனை என்றே மருண்டு!
அகரம்.அமுதா
குறளின் கருத்தை கவிதை வடித்தே
பதிலளிநீக்குஅருமைத் தமிழில் அளித்தார் - பெருமை
மிகவே பேணுவேன் மாண்புறு நண்பர் அகரம் அமுதனை ஆம்!
இப்னு ஹம்துன் அவர்களுக்கு என் பணிவான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். தங்கள் வரவு என்னை பேரின்பத்தில் ஆழ்த்துகிறது. நன்றி! நன்றி!
பதிலளிநீக்குஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.
பதிலளிநீக்கு"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"
http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html
அன்புடன்,
விஜய்
கோவை
வாருங்கள் விஜய்! முதலில் உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்!
பதிலளிநீக்குVery good!
பதிலளிநீக்குநன்றிகள்.
பதிலளிநீக்குநன்றிகள்.
பதிலளிநீக்கு