வெள்ளி, 6 ஜூன், 2008

நான்கண்ட முத்தமிழ் அறிஞர்!


தமிழ்வாழ்த்து!

வானை பிறைவாழ்த்தும் வல்லமை தா!தமிழே!
ஆனமட்டும் முத்தமிழ் ஆசானை -நானுவந்தே
நற்கவி தீட்டுவதால் நற்றமிழே! உன்றனிரு
பொற்கழல் போற்றல் புகழ்!

நான்கண்ட முத்தமிழ் அறிஞர்!
அஞ்சுகத்தாய் சேயாகி அண்ணாவின் தம்பியுமாய்
தந்தஉரை யால்குறளோன் தாசனுமாய் -செந்தமிழர்
சிந்தை நிறைந்தவராய் செம்மொழி கண்டவராய்
அஞ்சுமுறை ஆண்டார் அறி!

எழுகடலை உட்புகுத்தி யாப்பிசைத் தோனுக்
கெழுகடல்மேற் சிற்பம் எடுத்தார்! -தொழுமிறைவன்
தென்னை இளநீருள் தென்னை தனைவைத்த
உண்மை நிலையதனை ஓர்ந்து!

மூவடி யாலளந்தோன் மூவுலகை ஓர்முக்கால்
சேவடி யாலளந்தான் தீம்புலவன் -ஆவலோ(டு)
இங்கவனின் இன்குறளுக் கோவியமே தீட்டிவிட்டார்!
தங்தத் தமிழ்வாழத் தான்!

பேச்சில்; செயலில்; பெரிதும் இவரெழுத்தில்;
மூச்சில்; விழிப்பார்வை ஓரத்தின் -வீச்சில்;
நடையில்; நளினத்தில்; நல்லுருவில் நன்றாய்த்
தடையின்றி வாழும் தமிழ்!

அடிமுடி காணா அருந்தமிழ் கண்டே
நொடிநொடி தோறும்‘பா’ நூற்றார் –அடிமடி
தான்கனக்க அஞ்சுகமா ஈன்றார்? இலையிவரை
வான்தமிழே ஈன்றதென வாழ்த்து!

அன்னை தமிழென் பதில்தவ றில்லை;
தமிழ்அன்னை எனுஞ்சொல் அதுதவறே! -இன்றமிழே
ஆணுருவேற் றிங்கிவராய் ஆனதனால் இற்றைமுதல்
பேணுதமிழ் ஆண்பால் பெறும்!

அகரம்.அமுதா

6 கருத்துகள்:

  1. இப்படி கவிதை எழுதினா ஒரு comment கூட வராது. கதை எழுது அமுதா

    பதிலளிநீக்கு
  2. தமிழ் கவி புனைவதில் நான் அகரம் [இல்லை இல்லை தகரம் ]நீங்கள் சிகரம்.

    பதிலளிநீக்கு
  3. அய்யய்யோ! கொமா அப்படியெல்லாம் சொல்லாதிங்க!

    வான்குருவியின் கூடு வல்லரக்கு தொல்கரையான்
    தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் -யான்பெரிதும்
    வல்லோமே என்று வலிமைசொல்ல வேண்டாங்காண்
    எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது!

    அப்டின்னு அவ்வை சொல்லியிருக்காங்க! உங்களுக்குன்னு தனித்திறமையிருக்கு. அதில் வெற்றிநடை போடுங்க. அப்படியே என்போன்ற வர்களையும் அரவணைச்சிக்கோங்க. அவ்வளவே!

    பதிலளிநீக்கு
  4. ஆணாகிப் போனதால் என்று அன்னைத் தமிழென்று கூறாமல் அதையே திருத்திக் கூறியது மிக அருமை.

    பதிலளிநீக்கு
  5. can you email me: mcbratz-girl@hotmail.co.uk, i have some question wanna ask you.thanks

    பதிலளிநீக்கு
  6. தனிமடல் அனுப்பியிருக்கிறேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு