அகரம்.அமுதா --- பாவலர்.இறையரசன் --- கவிஞர். இறை.மதி
இருவரி தீங்குறட்(கு) ஏற்றி இவர்செய்
அரும்பொருள் கண்டுமிக ஆர்த்தேன் -விரும்பி
இறையரசன் பண்ணிலுரை ஈந்த முறைபோல்
திறம்படச் செய்தார்யார் செப்பு!
ஞாலத்தை நன்களந்த நாலடிமேல் மால்கொண்டு
கோலெடுத்துத் தீட்டிவிட்டார் கொள்கையுரை -சாலமில்லா(து)
ஓங்கு பகுத்தறிவை உள்வைத்(து) ஒலித்திட்டார்
மாங்கனியுள் சாறுள்ள வாறு!
பாராளும் முப்பாற்கும் பாகன்ன நாலடிக்கும்
பேராளும் பாட்டிலுரை பெய்திட்டார் -நேராய்
இறையரசன் செய்திட்ட இன்பணி போற்றி
உரையரசன் என்றே உரை!
சூழ்ந்த பகையால் துவண்டொழிந்து போகாமல்
ஆழ்ந்த கலைவளங்கள் அத்தனையும் -தோய்ந்த
அமுத மொழியாய் அகிலத்தில் வாழும்
தமிழ்போல் வாழ்க தளிர்த்து!
பல்லாண்(டு) அவர்வாழப் பண்ணாளும் பைந்தமிழ்ச்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவரே -இல்லாண்டு;
செய்யும் தொழிலாண்டு; சேரும் புகழாண்டு;
வையத்துள் வாழ்வாங்கு வாழ்(க)!
அகரம்.அமுதா
அரும்பொருள் கண்டுமிக ஆர்த்தேன் -விரும்பி
இறையரசன் பண்ணிலுரை ஈந்த முறைபோல்
திறம்படச் செய்தார்யார் செப்பு!
ஞாலத்தை நன்களந்த நாலடிமேல் மால்கொண்டு
கோலெடுத்துத் தீட்டிவிட்டார் கொள்கையுரை -சாலமில்லா(து)
ஓங்கு பகுத்தறிவை உள்வைத்(து) ஒலித்திட்டார்
மாங்கனியுள் சாறுள்ள வாறு!
பாராளும் முப்பாற்கும் பாகன்ன நாலடிக்கும்
பேராளும் பாட்டிலுரை பெய்திட்டார் -நேராய்
இறையரசன் செய்திட்ட இன்பணி போற்றி
உரையரசன் என்றே உரை!
சூழ்ந்த பகையால் துவண்டொழிந்து போகாமல்
ஆழ்ந்த கலைவளங்கள் அத்தனையும் -தோய்ந்த
அமுத மொழியாய் அகிலத்தில் வாழும்
தமிழ்போல் வாழ்க தளிர்த்து!
பல்லாண்(டு) அவர்வாழப் பண்ணாளும் பைந்தமிழ்ச்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவரே -இல்லாண்டு;
செய்யும் தொழிலாண்டு; சேரும் புகழாண்டு;
வையத்துள் வாழ்வாங்கு வாழ்(க)!
அகரம்.அமுதா
திருக்குறளுக்கு பலர் உரை எமுதியிருந்தாலும் ஒவ்வொருரிடமும் புதிய பரிணாம வளர்ச்சி காண்பது அதனின் சிறப்பு.
பதிலளிநீக்குஆம் சொல்லரசன் அவர்களே! தாங்கள் சொல்வது சரிதான்
பதிலளிநீக்குவணக்கம். நலமா?.நிங்கள் திருமதி. தங்கமணி அவர்களின் பதிவை பார்த்திருக்கிறீர்களா? http://kavidhaithuligal.blogspot.com/ கண்டிப்பாக பார்க்கவும்.பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஉமா.
நலம். மற்றும் வணக்கம் உமா அவர்களே! திருமதி.தங்கமணி அம்மையார் அவர்களை நான் முன்பே அறிவேன். அவர்கள் வலையில் நானும் என்வலையில் அவர்களும் நிறைய பின்னூட்டங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.
பதிலளிநீக்கு