எழுத்தின்
கண்கள்வழி
எண்ணியதைப் படம்பிடித்து
–உள்ளம்
உறுத்தும் நினைவுகளை
உடுத்திக்கொண்ட கடிதமிது
இறவா திருந்திருந்தால்
இதுகடிதம் என்றிருப்பேன்
–நம்
உறவின் ஆழம்நீ
உணருமுன் இறந்திருப்பேன்
சின்னஞ் சிறுவயதில்
சேர்ந்தே வளர்ந்திட்ட –ஏழ்மை
என்னும் பாம்பென்னுள்
எங்கெங்கோ புற்றுவைக்க…
கைவைத்த மேலாடை
அங்கங்கே கிழிந்திருக்கும்
–கிழிசல்
தைத்த நூலிணைத்தால்
புத்தாடை கிடைத்திருக்கும்
கொந்தும் ஏழ்மையெனைக்
கொல்லாமல் விட்டுவைக்க –நீதான்
வந்துநீர் வார்த்தாய்என்
வறுமைக்கு வறுமைவைத்தாய்
ஊண்வேண்டும் போதெனக்கு
உதவும்கை யானவனே -அன்று
நான்கொண்ட புண்ணிரண்டைக்
கண்ணிரண்டாய்ச் சமைத்தவனே!
வாழ்க்கை வானத்தில்
வளர்பிறையாய் வளர்ந்தேன்
–நீ
சூழ்ந்து செங்கதிராய்ச்
சுடர்தந்த காரணத்தால்…
என்நலம் உன்நலமாய்
எப்போதும் எண்ணியதால் –நண்பா
தன்நலம் என்னவென்றே
அறியாத தூயவன்நீ
பெண்பார்த் தெனக்குப்
பேசி முடித்தவனும் –அதன்
பின்குடும்பம் நான்நடத்த
பேருதவி செய்தவனும்
ஏழை எனதெழுத்தை
ஏந்திப் பிடித்தவனும் -என்
ஊழை உடைத்து
ஓங்குபுகழ் நட்டவனும்
நீதான் நீதான்
நெஞ்சமெல்லாம் நீயேதான்
–என்
தாயின் மறுவுருவாய்த்
தரணிவந்த தேவேதான்!
எழுத்தெனது; எழுது
கோலுனது; கருத்தெனது; -அதை
எழிலுறத் தாங்கும்
ஏடுகள் உனது!
எல்லாம் கொடுத்தாய்
எல்லாம்தான் கொடுத்தாய்
–என்
இல்லாமை இயலாமை
இல்லாமற் பொடித்தாய்!
எல்லாம் கொடுத்தவுனக்கு
என்னநான் கொடுக்க? –உன்னிடம்
இல்லாத ஒன்றைநான்
எங்குக்கண்டு பிடிக்க?
நெஞ்சம் இவ்வாறு
நினைந்து புலம்புகையில் –நீஎன்
மஞ்சத்தில் படுத்து
வஞ்சம் இழைத்துவிட்டாய்
தன்கை கொண்டெனது
தாரத்தைத் தொட்டவனே –இன்றளவும்
தங்கை எனவழைத்த
தாள்கொண்டு சுவ
எனையே கேட்டிருந்தால்
எடுத்துக் கொடுத்திருப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக