புதன், 5 பிப்ரவரி, 2025

 நான்!

துன்பங்கள் யார்படினும்
துடிக்கின்றவன்; - பிறர்
கண்ணீரைக் கவிதையாய்
வடிக்கின்றவன்!
கொடுமைகட் கறம்பாடி
முடிக்கின்றவன்; - அதன்
குரல்வளை நெரித்துயிர்
குடிக்கின்றவன்!
வன்முறை யார்செயினும்
வெடிக்கின்றவன்; - அந்தப்
புன்முறை போய்மாளப்
பொடிக்கின்றவன்!
பெயருக்கா எழுதுகோல்
பிடிக்கின்றவன்? - என்றன்
எழுத்தாலே இனப்பகை
இடிக்கின்றவன்!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Melappalayam S. Mani, Siva Raman Sreeramsiva மற்றும் 3 பேர்

 உண்டு பசிபோக்க ஓரா யிரம்சுவைகள்

கண்டு சமைத்தங்குக் காணழகாய்ப்-பெண்ணணங்கின்
வாயமுதம் போலும் வழங்குசுவை வேறுண்டா?
நீயறிந்தால் சொல்க நிமிர்ந்து!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Siva Raman Sreeramsiva, பாவலர் அபி சத்தி மற்றும் 4 பேர்

 அஞ்சில் வளைதல் அழகாம்; வறுமைஇப்

பிஞ்சை வருத்தல் பிழையன்றோ? -நஞ்சே
உருவான மாந்தர் உதவாத போதும்
உருகாத தென்னோ உளம்!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
ஜாய் சத்தியா, Melappalayam S. Mani மற்றும் 9 பேர்

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 சேர்ந்த இடந்தனைச்

செல்லாத காசாக்கல்
கூர்த்தமதி வைகோவின்
கோளாகும்; - பார்த்தன்று
நல்விஜய காந்தை
நசுக்கிச் செயல்தலையை
இல்லையென் றாக்கினார்
இன்று!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க

 A.T. Varatharajan

புக்கும் மரணத்தைப் போய்வர வேற்றுகண்
சொக்குந்தூக் கத்தைச் சுவையாக்கித் -- துக்கக்
களையெடுக்கப் பற்றி கருகியே தொற்றி
விளையாடும் ஆறா விரல்.
ஊதுவதில் உள்ளம்
உவப்பவனே! ஏமனவன்
தூதுவனாம் வெண்சுருள்
தூக்கியெறி; - தீதுணர்ந்தும்
பற்றுவைக்கும் உன்னுள்
பலநாள் மறைந்திருந்து
புற்றுவைக்கு மன்றோ
புகை!!!
A.T. Varatharajan:-
பற்றி எரிந்துப் பழகும் பொழுதெல்லாம்
கற்றதினும் மேலோங்கும் கற்பனைகள் -- கற்றகவிக்
கோவாக்கும் செந்தமிழைக் கோர்த்தே அணிசேர்த்துப்
பாவாக்கும் இந்தப் புகை.
அகரம் அமுதன்:-
சட்டியில் உள்ளதுதான்
சட்டுவத்தில் என்றுணர்ந்து
விட்டொழிக்க வேண்டுமடா
வெண்சுருளை; - மட்டின்றிக்
கற்பனைகள் மேவுவதாய்க்
காதோரம் பூச்சுற்றல்
விற்பனனில் வேலையோ?
விள்!

 பெட்டைக்குப் போர்புரியப்

பேராவல்; நைந்தகூ
முட்டைக்குக் குஞ்சீன
மோகம்;நாய் - விட்டைக்குப்
பூசுணைப் பூசுமக்கப்
புந்தி; இவைநேராம்
கூசுதலில் லா'ரஜினி'
கூற்று!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க