நிக்காமப் போகிற கக்காவை நிப்பாட்டி
வக்காளி நாங்கஇப்போ வைக்கணுமா? - தொக்காகப்
போச்சாஎம் போர்வீரம்? போக முடியலையே
மூச்சாவைக் கூடத்தான் முன்பு!
பெத்தாம் பெருங்கப்பல் பேருக்கே; ஆய்போகக்
கொத்தாய்நிற் கின்றோம் கியூவிலே –
செத்தாலும்
இந்தப்போர் வேலைக்(கு) இனிவரக் கூடாது;
குந்திச்சா கின்றோம் குதம்!
அக்கப்போர் பண்ணும் அமெரிக்கப் கப்பலிலே
கக்காப்போர் ஒன்னு கதிகலக்க – எக்கணமும்
சீறுதே எங்கள் சிறுநீர்; கழிவறை
நாறுதே கப்பல் நகர்த்து!
ஆய்போக ஆகா அமெரிக்கப்
போர்க்கப்பல்
போய்ப்போய்ஈ ரானுடனா போர்வெல்லும்? - சேய்நின்று
சூர்காட்டு மன்றிச் சுடாதுஇக் கப்பலைப்
பார்பார்த்தும் அச்சப் படாது!
போய்க்குண்டு போடப் புறப்பட ஆகிடுமா?
வாய்ச்சண்டை போடுகிற வல்லரசே! – பாய்மார்தம்
மூக்கறுக்க ஆகிடுமா? முட்டிதேய
நேர்ந்திடுமா?
பீக்குண்டி யான பிறகு!?
குண்டிக்குப் பின்னால் குடைகிறதே; செய்திடுவோம்
சண்டைக்கு முன்னால் சமாதானம் – தண்டிக்கக்
கக்கூஸே எங்களின் காலனாய் ஆனதனால்
அக்கூச்சம் கொல்கிறதே ஆள்!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக