ஆண்:-
ராவுணவு என்ன? ரவையா?சப் பாத்தியா?
நோவுதுன்னு சொல்லியே நோன்பிருப்பா? – தேவுடா!
தோசைக்குச் சட்னியா? சூடுசெய்த சாம்பாரா?
ஓசைவாய் அன்பே! உரை! 1
பெண்:-
மல்லிகைப்பூ இட்லி மணக்கும்தேங்
காய்ச்சட்னி
நல்லபடி செய்துதர நான்முனைந்தேன்; – மல்லிகைப்பூ
வாங்கிவந்த மாமனுக்கு வந்தருந்த
வாய்ப்பிருக்குத்
தேங்கியுண்டு செவ்விதழில் தேன்! 2
ஆண்:-
வம்பைப்பூப் போல்கிள்ளும் வைபவமே, நீவார்க்கும்
தும்பைப்பூ இட்லி தொடுகையிலே; - கும்பிக்கும்
ஓவ்வாமை இல்லை; செரிமானச் சிக்கலில்லை;
செவ்வாழைத் தண்டே!வாய் சேர்! 3
பெண்:-
தோளிலென்னைத் தூக்கினால் தோசையெங்கு
வார்ப்பது?
தாளிலுன்னால் மின்சாரம் தாக்குது; – வாளிகொண்டு
மோகத்தை நீயிறைக்க, மொத்தஉடல்
நானிளைக்க,
தாகம்தீர்ந் தாலும் தவிப்பு! 4
ஆண்:-
மணக்கின்ற பேச்சால் மனங்கவரு கின்ற
குணவதி!வா! சேர்ந்து குளிப்போம்; - உணவைக்
குடற்பசிக்குப் பின்னே கொடுக்கலாம்; முன்னே
உடற்பசிக்குத் தாராய் உனை! 5
பெண்:-
வாய்ப்புக் கிடைத்தால் வகையாய்ச்
சுவைக்கத்தான்
பாய்க்கழைக் கின்றாய் பரவசமாய்; – வாய்க்குணவு
போடுங்கள் என்றுநான் பொங்கி
வடித்தளித்தால்
நூடுல்ஸ் இடையினிலே நுங்கு! 6
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக