வெள்ளி, 19 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (4)


ஊருக்குச் சோறிட்ட ஒண்டமிழன் வாய்நனைக்க
நீருக்கும் போராட நேர்ந்ததுவே –பாருங்கள்
பாரோரே! பட்டினியாற் சாகுமிவர் காண்;கண்ணில்
நீராறே ஓடும் நிறைந்து.


அகரம் அமுதா

1 கருத்து:

 1. தாள்முழுக்கச் செய்திகள்; எம்மக் களைப்பற்றி
  நாள்முழுக்கப் பேசுவோம் வாய்கிழிய மட்டும்;
  அகலவில்லை துன்பங்கள் இன்னுமே இங்கு
  நகர்வது நாட்கள்மட் டும்.

  ----------------------

  கண்டிப்பாக இன்னும் கற்றுக் கொள்ள நிறைய
  அதனால் தவறுகள் ஏற்படுகிறது.

  தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிங்க

  அன்புடன்
  திகழ்

  பதிலளிநீக்கு