செவ்வாய், 16 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (3)


தெம்பில்லை தேம்பியழத் தெய்வம் துணையென்றே
நம்பினோம் அஃதும் நடக்கவில்லை -எம்மினத்தைச்
சுட்டழிக்கும் சிங்களரைச் சுட்டெரிக்காச் சூரியனே!
சுட்டெரிப்ப தெங்களையேன் சொல்.


அகரம் அமுதா

5 கருத்துகள்:

 1. நிதர்சனமான உண்மை
  நிச்சியமாக
  நம்மிடம் வார்த்தை இல்லை

  பதிலளிநீக்கு
 2. தங்கள் திருத்திய வெண்பா
  .........................

  சொல்லியழ எங்களுக்கு வார்த்தையில்லைப் பாருங்கள்!
  பால்மணம் மாறாத பாலகனைப் பாவிகளே!
  உங்களுக்(கு) எப்படித்தான் ஈரமற்றுப் போனதோ
  எங்களைக் கொன்றழிக் க!

  பதிலளிநீக்கு
 3. அழுது புலம்புகிறேன் நானிங்கே உன்னைத்
  தொழுதென்ன புண்ணியம் ஆண்டவனே வேதனையைத்
  தீர்ப்பாய் எனவுன்னை வேண்டினேன் வேடிக்கை
  பார்க்கின்றாய் நீயன்றோ இங்கு!

  -------------------------

  நன்றிங்க

  பதிலளிநீக்கு