மயர்வகற்றிக் கற்றபதே மாண்பு!
மாண்பு தமிழ்க்கல்வி மற்றை மொழிக்கல்வி
வீண்பெருமை வேண்டாம் விடு!
விடுத்தார் தமிழறிஞர் வேண்டி விருப்புற்(று)
எடுத்தோமா தமிழ்வழி ஏடு!
ஏடழித்த முன்னோர் இடரெதிர்த்து வாழ்தமிழின்
பீடழிக்காய் தாய்தமிழிற் கல்!
கற்றாரின் மேலாம் கலாதார் வினவிவிடின்
பற்றார் அயன்மொழியைப் பாய்ந்து!
பாய்ந்தோடு கின்றாய் பலமொழிகள் கற்க
தாய்தமிழை ஏனோ தவிர்த்து!
தவறுணந்து பேணத் தலைப்படு தாயை
எவருன்போல் கொன்றார் இயம்பு!
புட்டிப்பால் ஆகும் பிறவெல்லாம் பூந்தமிழே
முட்டிப்பால் உண்ணும் முலை!
முலையிலாள் முன்னழகும் முத்தமிழிற் கல்லாக்
கலையழகும் குன்றும் கடிது!
கடிது தமிழென்பார் கண்ணிலார் தேடிப்
படித்தயலைக் காப்பார் பரிந்து!
அகரம் அமுதா
பாய்ந்தோடு கின்றாய் பலமொழிகள் கற்கதாய்தமிழை ஏனோ தவிர்த்து!பணத்திற்காக பலமொழி கற்கபாய்ந்து ஒடவேண்டிய நிலை.ஆனாலும் தமிழினத்திடையே தமிழை தவிர்ப்பது தவறு
பதிலளிநீக்கு//கடிது தமிழென்பார் கண்ணிலார் தேடிப்
பதிலளிநீக்குபடித்தயலைக் காப்பார் பரிந்து!//
உண்மைதான். வாழ்த்துகள்.
உமா, சொல்லரசன் இருவர்க்கும் எனது நன்றிகள்.
பதிலளிநீக்குபுட்டிப்பால் ஆகும் பிறவெல்லாம் பூந்தமிழே
பதிலளிநீக்குமுட்டிப்பால் உண்ணும் முலை!
///
அன்பரே!!
அருந்தமிழில்
நீர் எழுதியுள்ள பாக்கள் அருமை!!
மிக்க நன்றிகள் தொழர் அவர்களே!
பதிலளிநீக்கு