செவ்வாய், 5 மே, 2009

ஈற்றடி இந்தா எழுது!

சாற்றடி நான்கிலும் சத்துள்ள நற்கருத்தை
ஏற்றடி என்பேனே என்தங்காய்! -ஆற்றடி
மாற்றடி ஏழை மனத்துயரை வெண்பாவின்
ஈற்றடி இந்தா எழுது!

குறிப்பு:-
"வெண்பாவால் ஏழை மனத்துயரை ஆற்றவும் மாற்றவும் செய்க" என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்க.


அகரம்.அமுதா

3 கருத்துகள்:

 1. //சாற்றடி நான்கிலும் சத்துள்ள நற்கருத்தை
  ஏற்றடி //

  ஆஹா மிக அருமை. உங்கள் ஈற்றடிக்கு எங்கள் முயற்சிகள் தொடர்கின்றன.

  பதிலளிநீக்கு
 2. வெண்பா எழுதிட ஆர்வம் இருக்கின்ற
  நண்பர்காள் கேளீர் இதனையும் - வெண்பாவை
  ஈற்றடிக்குத் தக்க எழுதுதல் ஓர்சுகம்
  ஈற்றடி இந்தா எழுது

  பதிலளிநீக்கு