பீடெடுத்து நின்றான் பிறந்து!
கதைக்கும் பொருந்தும் கருத்திட் டிழிந்தோர்
பதைக்கும் கவிசெய்தான் பார்த்து!
மூடப் பழக்கம்முன் னேற்றத் தடையென்றுச்
சாடிச்சாக் காடீந்தான் சார்ந்து!
கடமையைக் கூடஅருங் காதலிற் சொன்னான்
மடமையை ஏறி மிதித்து!
திரைப்பாட்டிற் சுந்தரம்பொற் சின்னஞ் சிறார்க்கும்
உரைப்பாட்டுச் செய்தார்யார் ஒப்பு!
எதுவுடைமை என்றே அறியா தவர்க்கும்
பொதுவுடைமை சொன்னான் புரிந்து!
சின்ன வயதெனினும் செய்து திரைக்கீந்த
சின்னூறு பாட்டுஞ் சிறப்பு!
நாட்டிற் கொருகோட்டை நல்லரசு சுந்தரமே
பாட்டிற் கொருகோட்டை பார்!
அகரம் அமுதா
பட்டுக்கோட்டையார் மிக அற்புதமான கவிஞர். அன்றும் இன்றும் என்றும் அவர் பாடல்கள் கருத்தாழமும் கேட்க இனிமையுமானவை. குறளில் அவர் சிறப்பை கவியாக்கியிருப்பது மிக அருமை.
பதிலளிநீக்குபட்டுக்கோட்டையார் மிக அற்புதமான கவிஞர். அன்றும் இன்றும் என்றும் அவர் பாடல்கள் கருத்தாழமும் கேட்க இனிமையுமானவை. குறளில் அவர் சிறப்பை கவியாக்கியிருப்பது மிக அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றிகள் தோழி
பதிலளிநீக்கு