வெள்ளி, 12 செப்டம்பர், 2025

 பையன் 1

மச்சான் இருடா!
வராப்போல் இருக்குடா!
உச்சா விடணும்
உதவுடா! - வச்சானா
குஞ்சாம் மணிபுடிச்சிக்
கூலா விடும்ஒசரம்?
என்னா பிளம்பர்
இவன்?
பையன் 2
எம்மாம்நே ரம்டா?
எனக்கு வலிக்கிதுடா!
சும்மா முதுகு
சுளுக்குதுடா! - அம்மாடி!
என்னா கனம்டாநீ?
யப்பா! பொணம்டாநீ?
சொன்னா இறங்கித்
தொலை!
பையன் 1
ஒத்த நிமிஷமும்
உள்ளம் பொறுக்காம,
கத்தி அழுது
கதறாம, – செத்தயிரு!
முந்தி வருகிற
மூத்திரம் உம்மேல
சிந்தாமப் போணும்
சிறிது!
பையன் 2
தண்டு வடமுடையும்
சத்தம்நீ கேக்கலையா?
கண்டும் பொழுதக்
கடத்துறியா? – அண்டாவில்
கொள்ளும் அளவுக்கா
கொட்டுற மூத்திரத்த?
முள்மேல்நின் னாப்போல்
முடி!
பையன் 1
ஆத்திரங் காட்டி
அதட்டுனா என்னால
மூத்திரம் போக
முடியுமா? – காத்துல
உம்மேலப் பட்டா
உசிரெடுக்க மாட்டியா?
சும்மா இருடா
சுமந்து!
பையன் 2
என்னச் சுமக்கயில
என்னென்ன பேசின?
ஒன்னுக்கு நாம்போக
உட்டியா? – கன்னத்தில்
ஓர்துளி பட்டதுக்கே
ஒப்பாரி வெச்சியே!
பார்,தெறிக்கு தெம்மேலப்
பட்டு!
பையன் 1
எம்மேலத் தப்பில்ல;
ப்ளம்பிங் சரியில்ல;
உம்மேல் குறைசொல்ல
ஒன்னுமில்ல; – சும்மாவே
ஒம்போ தடிதாண்டி
ஒன்னுக்கு நாம்விடுவோம்;
எம்ப முடியலையே
இங்கு!
பையன் 2
ஒன்னுக்கக் கொண்டுநாம்
ஓவியம் போட்டதெல்லாம்
இன்னைக்கும் நெஞ்சில்
இருக்குது; – அன்னைக்குச்
சாத்தான நாம்வரைய
சாமின்னு கும்பிட்ட
தாத்தா நினைவுவரார்
சற்று!
பையன் 1
விட்டு முடிக்கும்முன்
வீணாச் சிரிப்பேத்தித்
திட்டவும் செய்யிற
சிந்துதுன்னு; – முட்டிவர
மூத்தரத்தத் தானடக்க
என்னால் முடியாது;
ஆத்திரத்தக் கொஞ்சம்
அடக்கு!
பையன் 2
சிரிச்சிச் சிரிச்சே
வயித்து வலியில்
மறந்தேன் முதுகு
வலிய; – இறங்குடா!
வெட்டவெளி தான்நம்
விருப்பத்துக் கேத்தது;
வெஸ்டர்ன்டாய் லெட்டெல்லாம்
வேஸ்ட்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக