வியாழன், 12 ஜனவரி, 2012

படப்பா! 36
உடைப்பதா?
பத்திரப்படுத்துவதா?
நீயே முடிவெடு

தாவும் மந்தியிடமிருந்து
தவறிவிழுந்த குட்டியை
மீண்டும்
தாய்க்குரங்கு எப்படி
தூக்கிச் சுமப்பதில்லையோ
அப்படி
அந்த எனது
முந்நாள் இதயத்தைத்
தூக்கிச்சுமக்கச் சம்மதமில்லை எனக்கு

என் இதயத்தோடு சேர்த்து
இரண்டு இதயங்கள் இருக்கும்போதும்
இதயமில்லாதவளாய்
உன்னால்
இருக்கமுடிகிறபோது

இதயமே இல்லாமல்
என்னால்
வாழமுடியாதா என்ன?

1 கருத்து:

  1. அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    பதிலளிநீக்கு