திங்கள், 9 ஜனவரி, 2012

படப்பா! 35
பாறையைத்
தழுவிக்கொண்டோடுகிறது
தண்ணீர்
உருட்டிக்கொண்டோடுகிறது
வெள்ளம்

நீ
காதலை ஏவித்
என்னைத் தழுவியும்
உன்னையே ஏவி
உருட்டியும் விளையாடுகிறாய்

பாறை தூளானால்
மணலாகும்
என்னைத் தூளாக்கிக்
கைநிறைய அள்ளிக்கொள்கிறாய்
கவிதைகளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக