திங்கள், 19 அக்டோபர், 2009

பிரிவுப் படலம்!

இத்துடன் நம்காதல்
முறிந்து போகட்டும்...

ஒருவேளை
அது தொடருமானால்
நம் திருமண பந்தத்தால்
திரிந்து போகலாம்...

கலவியின் முடிவில்
கசந்து போகலாம்...

குடும்பச் சுமைசுமந்து
கூன்விழவும் நேரிடலாம்...

இப்படியாய் அதற்கு
மரணம் சம்பவிக்க
நமக்குள்
பிரிவாற்றாமை நிகழக்கூடும்!

இத்துடன் நம்காதல்
முறிந்து போகட்டும்...

ஒருவேலை
அது தொடருமானால்
அதுவே என்
எழுதப்படாத கவிதைகளுக்கு
முற்றுப் புள்ளியாய்
அமையக்கூடும்...!

அகரம் அமுதா

2 கருத்துகள்:

 1. நலமா தோழரே...
  மிக அருமை தோழரே. தங்களிடமிருந்தா இக்கவிதை??????
  வியப்பாக உள்ளது.... மிக மிக விரும்பி படித்தேன். தொடர்வோம்

  பதிலளிநீக்கு
 2. //திருமண பந்தத்தால்
  திரிந்து போகலாம்...//

  திருமணத்திற்குப் பின்தான் காதல் உன்னதமாகிறது. திரிந்துப் போவது உண்மைக்காதலல்ல.

  //குடும்பச் சுமைசுமந்து
  கூன்விழவும் நேரிடலாம்...//
  சுமையில்லா வாழ்க்கையில் சுவையிருக்காது.

  என்னவாயிற்று ஒரே எதிர்மறை கருத்துகள்? ஆனாலும் கவிதை அழகு.
  வாழ்த்துக்கள்.

  வெணபா வலைப்பக்கம் காணவில்லையே? விரைவில் எதிர்பார்க்கிறோம்.

  பதிலளிநீக்கு