செவ்வாய், 5 ஜூன், 2012

அமுதன் குறள்! 3


காற்றுவர ஆடும் கனிமரத்தில் பேயுளதாய்ச்
சாற்றுகதை சொன்னால் சிரி. (11)

ஆ*வின்பால் வேண்டாம்; அழுதுஅடம் செய்தேனும்
தாயின்பால் உண்டு தழை. (12)

தாய்ப்பால் தவிர்த்தல் தளிருடலில் நோய்தொற்ற
வாய்ப்பாகும் தாய்ப்பால் பருகு. (13)

நிலாக்காட்டி அன்னை நினைக்கொஞ்சி ஊட்டும்
நிலாச்சோற்றை உண்பாய் நிமிர்ந்து. (14)

அன்னை மொழியும் அவள்தரும் இன்னமுதும்
உன்னை வளர்க்கும் உரம். (15)


தாய்பிசைந்(து) ஊட்ட தளிர்வாய் மலர்ந்துணவைப்
போய்ப்புசித்(து) உற்றபசி போக்கு. (16)

பிஞ்சுக்கை நீட்டிப் பிசைந்த உணவள்ளிக்
கொஞ்சியுன் தாய்க்கும் கொடு. (17)

எச்சில் உணவெனினும் ஈன்ற மகவூட்ட
மெச்சியுண் ணாளோ மிளிர்ந்து. (18)

உன்தாய் வெகுளாள்; உணவைஉண் ணும்நேரம்
சிந்தா மணியேநீ சிந்து. (19)

சுவையுண(வு) ஊட்டுங்கால் அன்னை நவிலும்
செவியுணவும் உண்ணல் சிறப்பு. (20)


                                         12.பசு 

2 கருத்துகள்: