வியாழன், 6 அக்டோபர், 2011

மனுசன நெனச்சே சிரிக்குறேன்

மனுசன நெனச்சே சிரிக்குறேன் –அவன்
மனசுல உள்ளத கணிக்குறேன்!

நீதி நேர்மய நெனக்கல –சரி
பாதி பொண்ணுண்ணு மதிக்கல
கருத்துல தெளிவில்ல கண்மண் தெரியல
கால்போற போக்கு சரியில்ல –உடல்
ஆட்டங் கண்டா அப்போது தான்டா
ஆண்டவன் இருப்பது தெரியுது –அவன்
அருள்மனம் வேண்டி உருகுது! -இந்த
(மனுசன)
எளமத் திமிருல திரியுறான் –அவன்
எளச்சவன் கெடச்சா எகுறுறான்
தலகீழ நிக்குறான் தாண்டவ மாடுறான்
தானென்னு மகத்தையில் தருக்குறான் –இத
எடுத்துச் சொன்னா எதிரில் நிண்ணா
எதிர்த்தவன் ஆவிய பிடுங்குறான் –எமன்
எதிரே வந்தா நடுங்குறான்! -இந்த
(மனுசன)

3 கருத்துகள்:

  1. கவிதை அருமை அமுத!
    வலைப்பக்கமே வருவதில்லை
    ஏன்..?

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  2. கவிதை நன்று நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. நன்றிகள் அய்யா. நன்றிகள் நண்பரே

    பதிலளிநீக்கு