வெள்ளி, 10 ஏப்ரல், 2009

இட்டவடி நோவும் அவட்கு!

சீர்பதி னைந்தும் அகவையாம் சேர்மோனை
மாராம் வழங்கெதுகை பின்னழகே நேர்தனிச்சீர்
கட்டழகுக் கூந்தல் கருதுதளை தட்டிவிடின்
இட்டவடி நோவும் அவட்கு!

நூலாடை யால்மேனி நோகும் எனத்தெரிந்தே
பாலாடை கட்டிவிட்டுப் பார்த்திருத்தேன்! -பாலாடை
பட்டவிடம் நோகப் பரப்பியப்பூ மெத்தையிலே
இட்டவடி நோகும் இவட்கு!


அகரம் அமுதா

2 கருத்துகள்:

 1. //சீர்பதி னைந்தும் அகவையாம் சேர்மோனை
  மாராம் வழங்கெதுகை பின்னழகே நேர்தனிச்சீர்
  கட்டழகுக் கூந்தல் கருதுதளை தட்டிவிடின்
  இட்டவடி நோவும் அவட்கு!//

  வெண்பா 'பெண்'பாலானது மிக மிக அருமை. வாழ்த்துக்கள் பல.

  சில தினங்களாக உங்களை காணவில்லையே?

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் உமா அவர்களே! பின்னூட்டத்திற்கு நன்றிகள். சில நாட்களாக நிறைய பணியின் காரணமாக என்னால் இணையப் பக்கம் அவ்வளவாக வரமுடியவில்லை. சில நாட்கள் பொறுத்துக் கொள்ளவும்.

  பதிலளிநீக்கு