வியாழன், 5 பிப்ரவரி, 2009

சுவடுகள்!

இலக்கின் காற்புள்ளி...
இலட்சியத்திற்கு
பிள்ளையார் சுழி...
========
========

தூரிகையின்றித்
தீட்டிய ஓவியம்...
மையூற்றாமல்
மெய்யெழுதும் காவியம்...
========
========

பயண அஞ்சல்
இலக்கை அடைய
அஞ்சல் தலையும்...
அதிலிடும் முத்திரையும்...
========
========

பாதப் பதிப்பகம்
வெளியிடும் பதிப்பு...
பாதைகள் எல்லாம்
நூல்களின் தொகுப்பு...
========
========

இளமையின் மீது
நம்பிக்கை வைத்து
இலக்குகளை
ஊதியமாய் வழங்கும்
பயணங்கள்
முதுமையிடம் மட்டும்
ஊண்று கோல்களின்
சாட்சிக் கையொப்பத்தையும்
கேட்டுப் பெறுகிறது...!

அகரம்.அமுதா

3 கருத்துகள்:

 1. நீங்கள் உங்கள் கவிதைகளையும் வெண்பா பாடத்தையும் புத்தகமாக வெளியிடலாமே.புத்தகமாய் வர மிகச் சிறந்த தகுதி வாய்ந்தவை இவை.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றிகள் அக்கா! அடுத்த ஆண்டு எனது கவிதை நூலை வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறேன். வெண்பாப் பாடத்தைப் பொருத்தவரை அவற்றை இன்னும் சிறப்பாக எழுதி அவற்றை வலையில் வெளியிட்டபின்பு புத்தகமாக்கலாம் எனக்கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. உங்கள் கவிதை நூலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு