தமிழர்க்கும் புலியென்று பேர் -இன்பத்
தமிழீழத் தாயகம் உயிருக்கு நேர்
தமிழர்சொல் "யாதும்நம் ஊர் -என்று
சாற்றிய அவர்கென்று வாய்க்குமோர் ஊர்?
தமிழர்தொல் மரபினம் பார் -புலித்
தலைவனின் நிழல்தனில் மறம்படிப்பார்
தமிழர்மெய் அன்பிற்கு வேர் -உயர்
தாயகம் காத்திடச் செய்குவர் போர்
தமிழர்க்குப் புகழென்று பேர் -அந்தப்
புகழ்யாவும் புலிப்படை ஈட்டிய சீர்
தமிழர்நல் ஈகைக்குக் கார் -எவர்
தறுக்கினும் நொறுக்கினும் அடிபணியார்
தமிழரைப் புறங்கண்டதார்? -வெஞ்
சமரிலும் விழவிழ உயிர்த்தெழுவார்
தமிழர்வன் சூழ்ச்சிவெல்வார் -தங்கள்
தாய்நிலம் மீட்டவர் ஆட்சிசெய்வார்
அகரம் அமுதன்
excellent. thanks a lot
பதிலளிநீக்குபாவேந்தரின் கவிதை படிப்பது போலவே எழுச்சி யூட்டுவதாய் உள்ளது.
பதிலளிநீக்குஆனால்
எல்லாம்
வெறும் கற்பனையாய்
போனதே என் எண்ணுகையில்
வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளதே நண்பரே.