வெண்ண தெரளயில தாழி உடைஞ்சதுபோல்
பக்கம்நீ வந்தா பேசத் தோனவில்ல
கள்ளச் சிரிப்புக் காட்டி உள்ள நெருப்ப மூட்டி
உசுரோட என்னைக் கொல்லும் ஜாதிமுல்ல
என்னாச்சி என்னாச்சி எனக்கிப்போ என்னாச்சி
என்தேசம் எங்கும் இப்போ அவளின் ஆட்சி
புண்ணாச்சி புண்ணாச்சி என்நெஞ்சம் புண்ணாச்சி
பூவுன்னு நெனச்ச ஒண்ணு முள்ளாப் போச்சி
பிறைவட்ட வானவில்லு
பெண்ணாகப் பிறந்ததேன்
வந்தெந்தன் கண்ணில்பட்டு
மறைஞ்சதேன் மறைஞ்சதேன்?
ஆறாப்பு போகயிலே மாராப்பு போட்டவளே
எட்டாப்பு போகயிலே சிட்டாப் பறந்தவளே
பத்தாப்பு போகயிலே மத்தாப்பாச் சிரிச்சவளே
முத்தாய்ப்பா என்னைப்பாத்து மொறச்சவளே
வண்ணக் குளத்துமீனே
வாடாத ரோசாப்பூவே
வருவாய்நீ என்றிருந்தேன் வரவில்லையே
எட்டுவச்சி நடக்கும்குயில்
எட்டுமாஎன் நெஞ்சத்துக்கு
பொட்டுவச்சிப் போகும்மயில்
கிட்டுமாஎன் கைகளுக்கு
நாத்தாக அவயிருந்தா காத்தத்தூது விட்டிடலாம்
உறவாக அவயிருந்தா பறவைய அனுப்பிடலாம்
கரும்பாக அவயிருந்தா எறும்பநான் அனுப்பிடுவேன்
இரும்பாக இருக்காளே நான் என்னசெய்வேன்
கண்ணே கருமணியே
காதல் கடுதாசியே
காந்தத்தைத் தூதனுப்பும் மரபில்லையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக