பொறுத்துப் பார்த்தேன் முடியலே –நான்
பொறுமை இழந்தேன் முடிவிலே
கருத்துச் சொன்னாக் கசக்குதா –அத
உறத்துச் சொன்னா உறைக்குதா?
உழைக்கச் சொன்னா முனகுறான் –பிறர்
உழைப்பில் வாழ முனைகிறான்
எடுத்துச் சொன்னா எதிர்க்கிறான் –தனைக்
கெடுத்துக் கொள்ளத் துடிக்கிறான் –மதி
மெத்த உண்டு –எனப்
பித்தங் கொண்டு –மன
சுத்தமின்றி நட மாடுகிறான் –அதப்
(பொறுத்துப்)
தப்புக்கு வருந்த மறுக்குறான் –அவன்
ஒப்புக்குந் திருந்தா திருக்குறான்
உப்புக்கும் பொராம தருக்குறான் –வெறும்
உடம்பை வளர்த்து முறுக்குறான் –பயம்
ஏது மின்றி –தன்
மான மின்றி –வழி
மாறிச்சென்று சுகம் காணுகிறான் –அதப்
(பொறுத்துப்)
போக்குச் சரியில்ல அதச்சொன்னா –அவன்
பொங்குறான் ‘அதனால் உனக்கென்னா
ஆச்சு’ண்ணு கேட்குறான் நமக்கென்னா –என
அலட்சியம் பண்ணாத அறிஞரெல்லாம் –அற
நூல்கள் தேடி –மன
நோயைச் சாடி –அறி
வூட்டினால் அரண் டோடுகிறான் –அதப்
(பொறுத்துப்)
பொறுத்தது போதும் அமுத-இனி
பதிலளிநீக்குபொங்கிட வேண்டும் அமுதே
வருத்தம் நீங்கினேன் அமுத-வாரி
வழங்கிட வேண்டும் அமுதே
கருத்தால் இணைந்தவர் நாமே-நட்பு
கரமே கோர்த்தவர் தாமே
பொருத்தமே தலைப்பே தந்தீர்-அன்பு
பூத்திட வலைப்பூ வந்தீர்
புலவல் சா இராமாநுசம்
எளிமையானாலும் சாட்டையடி.
பதிலளிநீக்குவணக்கம் அகரம்.அமுதா,
பதிலளிநீக்குநலமா?
சொற்சாட்டை சுழலுதய்யா...!
அய்யா இராமானுசம் அவர்களுக்கும் அய்யா அப்பாதுரையாருக்கும் சத்திரியன் அவர்களுக்கும் மேலான நன்றிகள்.
பதிலளிநீக்கு''..கருத்துச் சொன்னாக் கசக்குதா –அத
பதிலளிநீக்குஉறத்துச் சொன்னா உறைக்குதா?...''
உள்ளதைக் கூறினால் இப்படித்தான்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
நன்றிகள் கோவைக்கவி அவர்களே! மீண்டும் வருக ஆதரவுதருக
பதிலளிநீக்கு