செவ்வாய், 14 ஜூலை, 2009

குறளே வெண்பாவாக! (3)

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு! -குறள்-


முகத்தின் எதிர்நின்று முத்துப்பல் காட்டி
அகத்திற்புண் செய்வார் அறிவோ -டகமுமிலார்
யானுற் றுயிருருகி வாடும் நெடுங்காமம்
தானுறாத் தன்மையாற் சார்ந்து!

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்! -குறள்-

ஊரார் உரைப்பழி உற்ற உரமாக
நீராகி அன்னைசொல் வேர்பாய -பாராய்!
நெடிதோங்கி நின்று நிழல்விட் டரும்பிக்
கடிதோங்கிக் காய்க்குமிந் நோய்!

அகரம் அமுதா

8 கருத்துகள்:

 1. அருமை

  நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக
  நானும் எழுதுகின்றேன்

  பதிலளிநீக்கு
 2. கண்டிப்பாக எழுதுங்கள். வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. ஆ.ஞானசேகரன் சொன்னது…

  இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியருக்கு வாழ்த்துகள் ////////////////

  ரிப்பீட்டு ...............

  பதிலளிநீக்கு
 5. மிக்க நன்றிகள் சுரேஷ் குமார் அவர்களே

  பதிலளிநீக்கு