வியாழன், 5 மார்ச், 2026

சீமான் vs ட்ரம்ப்!


சீமான் vs ட்ரம்ப்!

 

செந்தமிழன் சீமான்:-

 

ஹாய்!ட்ரம்ப்! சவுக்கியமா? ஹர்மூஸ் அணையில்போர்

போய்நீஇப் போது புரியணுமா? - வாய்கிழிய

இஸ்ரேல் அழைத்தால் எகிறி அடிப்பாயா?

திஸ்ஈஸ்ராங் கான செயல்! 01

 

டோனல்ட் ட்ரம்ப்:-

 

சூரனே நீதான்னான்; சூப்பர் பவர்தான்னான்;

தீரனே தீ வை திரியில்னான்; - காரணம்

கேட்காமல் போய்க்கெட்டேன்; கேனையன் நானேஎன்

ஆட்சிக்கு வைத்துள்ளேன் ஆப்பு! 02

 

செந்தமிழன் சீமான் :-

 

எண்ணித் துணியும்முன் என்னிடம் கேட்டிருந்தால்

தண்மையாய் உன்னைத் தடுத்திருப்பேன்; – மண்டைக்

கனத்தாலே இன்று களத்தில்பின் வாங்கும்

உனக்கேனோ இம்மாம் உதார்? 03

 

டோனல்ட் ட்ரம்ப் :-

 

இட்லருக்கே புத்தி எடுத்துரைத்த உன்னிடத்தில்

நட்கழன்ற தால்கேட்க நான்மறந்தேன்; – நட்புடனே

ஓடிவந்து நின்றால் உதவுவாய் என்றிப்போ

நாடிவந்தேன்; தீர்வொன்றை நல்கு! 04

 

செந்தமிழன் சீமான் :-

 

அண்ணன் இருக்கிறேன் அழுது புலம்பாமல்

கண்துடை இந்தா!என் கைக்குட்டை; – தொண்டைக்குள்

முள்ளானார் முல்லாக்கள்; முள்ளை எடுக்கின்ற

முள்வாங்கி என்வாய் மொழி! 05

 

டோனல்ட் ட்ரம்ப் :-

 

அதட்டினால் அஞ்சும் அரபுலகம்; ஈரான்

அதற்கெலாம் அஞ்சுகிற ஆளா? – குதற்கமாய்ப்

பேசுகிற என்னையவர் பெண்டெடுக் கின்றார்;நான்

வீசுகிற பாமெல்லாம் வேஸ்ட்! 06

 

செந்தமிழன் சீமான் :-

 

மூத்திரச் சந்திலே முட்டாள் உனைமறித்து

ஆத்திரம் தீர அவனடிப்பான்; – சூத்தைநீ

பொத்தியிருந் தாலுண்டா பொல்லாப்பு? கிஞ்சித்தும்

புத்தியிருந் தாலுண்டா போர்!? 07

 

டோனல்ட் ட்ரம்ப் :-

 

வயோதிகனைக் கொன்றால் வழிக்குவரும் என்று

சியோனிசம் சொன்னதால் செய்தேன்; - அயோக்கியன்

என்றென்னை இவ்வுலகம் எள்ளிநகை ஆடுமென்ற

சின்ன அறிவுமின்றிச் சென்று! 08

 

செந்தமிழன் சீமான் :-

 

நாய்,வருக்கி மீதினிலே நப்பாசை வைப்பதொத்த

ஆய்வறிக்கை ஒன்றை அனுப்பினேன்; – வாய்கொழுத்த

வானரம் நீயதனை வாசித் திருந்தாயேல்

ஏனப்பா இந்தப்போர் இன்று!?09

 

டோனல்ட் ட்ரம்ப் :-

 

வாரி இறைக்கின்றார் வான்பரப்பில் ஏவுகணை;

போரின்றி விட்டாலே போதுமெனை; – சாரிசொன்னேன்

மாண்ட கமேனி மகனுக்கு; போர்நிறுத்தம்

வேண்டும் எனப்போய் விளம்பு! 10

 

செந்தமிழன் சீமான் :-

 

ஆமைக் கறிவளர்க்கும் ஆயுள்; உடல்பலத்தைச்

சாமை அரிசி தருவிக்கும்; - ஓமைகாட்!

சீமானிப் போரைச் சிலநொடியில் தீர்த்திடுவான்

மாமா!நீ உள்ளம் மகிழ்! 11

 

டோனல்ட் ட்ரம்ப் :-

 

கையல்ல காலிது காப்பாத்த வேண்டுகிறேன்;

பொய்யல்ல நெஞ்சம் புலம்புகிறேன்; – அய்யோ!இப்

போர்ச்செலவால் நாடு புதைகுழியில் வீழும்முன்

சீர்செய்வாய் ஏதேனும் செய்து! 12







நல்லதாய்ப் போச்சு;
நமது திருநாட்டில்
இல்லை வளைகுடாப்போல்
எண்ணெ(ய்)வளம்; - தொல்லைபட
நேர்ந்திருக்கும்; கூச்சல்
நிறைந்திருக்கும்; மேற்குலகம்
சூழ்ந்தெடுத்தி ருக்கும்
சுளுக்கு!