பெரம்பலூர் 'தனலெட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி'யில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் 'முனைவர் பீ.ரகமத் பீபி' அவர்கள் எழுதி வெளியிட்ட 'சித்திரக் கவிச்சோலை' என்ற நூலுக்கான விமர்சன வெண்பாக்கள்.
சித்திரப் பாவை திறமுடன் தீட்டிய
சித்தரப் பாவைத் திறனாய்ந்தேன் -சித்தம்
விரும்பியிவர் செய்த விசித்திரப் பாக்கள்
கரும்பிற் கணுவெனக் காண்! .1
மாலியின் ஓவிய வன்மையும் பாட்டெழுதும்
வாலியின் நற்றிறமும் வாய்த்தவரா(ம்) -வாலியின்முன்
மள்ளம் தனைக்காட்டும் மன்னர் நிலையொக்கும்
வெள்ளிய பாவதன் வீறு! .2
தால்தனில் ஏற்றித் தகவுடன் பாடிட
ஏல்கிற பாவிளக் கேற்றினார்? -நூல்தனில்
தூண்டிலாய் ஓவியம் தோன்றிட மீன்தானே
ஈண்டிவர் பாவெனல் ஏற்பு! .3
என்றோ இறந்ததாய் இயம்பும் வடமொழி
இன்றிங் கிவரால் எழுந்ததே; -இன்றுமுதல்
பொன்றிற்றே ஆரியப் புல்லர் மொழியெனார்;
நின்றிற் றிவர்வழி நீடு! .4
இலையோ? உளதோ? இடைதான் மடவார்க்(கு);
இலைபோல் உளதோ? இதன்நேர் -நிலைதான்
இரகமத் பீபி இயற்றிய நூலிற்
பொருட்செறி வென்பதும் போ! .5
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக