புதன், 29 ஜூலை, 2009

காட்சிக்குக் கவிதை!



விண்மணிகள் கோர்த்ததுபோல் வேட்டின் ஒளிவெள்ளம்
கண்மணிகள் கண்டு களிப்புறும்; -பெண்மணிகள்
பூக்கும் சிரிப்பன்ன பூத்ததுகாண் விண்வெளியில்
ஈர்க்கும் இளநெஞ்சை ஈண்டு!

மின்னல்போற் பூத்து மிளிருமொளி பொன்கூந்தற்
பின்னல்போற் சாலம் புரிந்திடவே -கன்னலைப்போற்
பெய்ஜிங் ஒலிம்பிக் பெருஞ்சுவரைக் காட்சிகளாய்
தொய்வின்றித் தந்திடுதே தான்!
அகரம் அமுதா

1 கருத்து:

  1. காட்சிகுக் கவிதை
    ramj

    முத்துக் கோர்த்ததுவோ முல்லைபூ பூத்ததுவோ
    த்ததும் இளங்குழவி தளிரபாத மென்நடையோ
    சித்தம் மிகமகிழ சிங்கார கவிதந்தீர்
    முத்தம் தமிழுக்கே முறையான வாழ்துமக்கே

    புலவர் சா இராமாநுசம் சென்னை 24

    பதிலளிநீக்கு