வெள்ளி, 9 ஜனவரி, 2009

இனியும் பொறுத்தல் இழுக்கு!


எலிகள் எதிர்த்தா இமயம் சரியும்
புலியே விரைவாய்ப் பொருது!

வாழ்வெண்ணி அண்டி வதைபடாய்; போரிட்டு
வீழ்ந்திடினும் பேறாம் விரும்பு!

சிறப்பே வரினும் சிறுமையுறாய்; சிங்களரை
இறப்பே வரினும் எதிர்!

இறுதி வரினும் எதிர்கொள்வாய்; ஈழம்
உறுதி எனப்பொரு(து) ஊர்ந்து!

நூற்றுவரை ஐவர் நுதிவென்றார்* சிங்களராம்
கூற்றுவரைத் திண்மதியாற் கூறு!

கனியும் பொழுதென்று காவாய்; துணிவாய்
இனியும் பொறுத்தல் இழுக்கு!

நஞ்சும் படையாய் நடைசெயினும் மோதா(து)
அஞ்சும் படையா அவண்!

கடுப்பைக் கிளப்பிக் களிக்கின்றார் கீழோர்
இடுப்பை ஒடித்தல் இசை!

கவலை அளிக்கிறதே! கண்ணிரொடு செந்நீர்த்
திவளை தெரிக்கிறதே சேர்ந்து!

செந்தமிழ் நூற்களைத் தீக்கீந்த சிங்கள
மந்திகளின் மார்பிளத்தல் மாண்பு!

அருஞ்சொற்பொருள்:-

நுதி -அறிவுக்கூர்மை(நுதிவென்றார் -அறிவுக்கூர்மையால் வென்றார் (மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஆல் தொகைநிலை), அவண் -அவ்விடம், கண்ணிரொடு -கண்ணீரோடு (காய்ச்சீர் நோக்கிக் குறுகிற்று)

அகரம்.அமுதா

2 கருத்துகள்:

  1. \\கவலை அளிக்கிறதே! கண்ணிரொடு செந்நீர்த்
    திவளை தெரிக்கிறதே சேர்ந்து!\\

    அருமை வலி சொல்லும் வரிகள்

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றிகள் ஜமால் அவர்களே!

    பதிலளிநீக்கு