புதன், 25 பிப்ரவரி, 2009

உளறல்!

உளறல் எனுமோர் உயர்தமிழ்ச் சொல்லுக்(து)
உளநற் பொருளும் உரைக்கின் -குளறல்;
உதவாக் குழறல்; உரைதடு மாறல்;
பிதற்றல் எனலாம் பெரிது!

கட்டித் தழுவிநாற் கால்சேர யாக்கையிரண்(டு)
ஒட்டி உறவாடி உய்கையில் -மெட்டி
தளர்ந்து தவித்துத் தளிர்க்கொடியாள் செப்பும்
உளறல் மொழிக்குண்டோ ஒப்பு?

அகரம்.அமுதா

4 கருத்துகள்:

  1. இந்த உளறல்க்கு ஒரு வென்பா! அருமைதொடர்ந்து எமுத வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. வெண்பா எழுதலாம் வாங்க'என்றபின் ஆசிரியர் வாராதிருப்பதேன்? பாடங்கள் ஓராண்டு மட்டும் தானா.மிகச்சிறப்பான வலைப்பதிவை என்னைப்போன்று புதிதாய் இணைபவர்களுக்காக உயிரோட்டத்துடன் வைத்திருங்களேன்.அங்கு சிலத்தேர்வுகளை எழுதிவிட்டு உங்கள் திருத்தத்திற்காக காத்திருக்கிறேன்.
    அன்புடன் உமா.

    பதிலளிநீக்கு
  3. மன்னிக்கவேண்டும் உமா அவர்களே! இனி தொடர்ந்து வர முயல்கிறேன். தங்கள் ஆர்வம் என்னை மெய்சிலிக்க வைக்கிறது. மீண்டுமொருமுறை எல்லாப் பாடங்களையும் இன்னும் எளிமையுடன் தர முயல்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாங்கள்.

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றிகள் சொல்லரசன் அவர்களே!

    பதிலளிநீக்கு