ஞாயிறு, 4 நவம்பர், 2012

கானா பாடல்! 5


ஒத்தசடை வளவிபோட்டு
உறலுகுத்தும் பெண்மயிலே
செத்தநின்று சேதிசொல்லு கண்ணாலே –நாம
சந்திப்போம் ஓடைக்கரை பின்னாலே –நீ
குத்துகிற உலக்க –வேலி
கொம்பைப்போல இருக்க –அதில்
சுத்துகிற கொடியா –நீ
சுத்தித்தானே இருக்க –நான்
பல்லுபோன பொக்க –அடி
ஒன்னப்பாத்து சொக்க

கொட்டப்பாக்கு இடிச்சிருக்கு
கொழுந்து வெத்தலை துடைப்பதற்குக்
கையால மறைச்சிக்கிட்டு முந்தானை
கொடுத்துப்புட்டு பக்கம்நில்லு செந்தேனே –உன்
பார்வைதான் சுண்ணாம்பு –நான்
பருவக்காளை நம்பு

பித்தம்முற்றிப் போனதால
ஒத்தநரை தலைமேல
சத்தியமாப் பிறைவளரும் தானம்மா –அப்படி
வளர்ந்ததுதான் என்வழுக்கை பாரம்மா –சுற்றி
வீசும் காற்று சூறை –அதில்
விழுந்ததெந்தன் கூரை

கிட்டப் பார்வை எனக்கில்ல
தூரப் பார்வை வந்ததில்ல
மாராப்புப் போட்டிருக்கும் அம்மாடி –உன்னை
மெல்லத் திறந்து பார்ப்பதற்கே கண்ணாடி –நான்
ஸ்டைலில் ரஜினி காந்து –நீ
தொட்டா ஒட்டும் கோந்து

போகவேணும் காசிப்பக்கம்
புறப்பாடு உந்தன் கக்கம்
புறப்பாடு உந்தன் கக்கம் ஆனாக்க –என்
பூமனசு நிறையாதோ தானாக –உன்
ஊசிக் கழுத்தில் பாசி –நான்
போகவேணும் காசி

எஃகுடம்பு எனக்கிருக்கு
அஃகுநடை தான்வழக்கு
முக்காலிக்கு மூனுகாலு வேணுமடி –நான்
முக்காலும் உணர்ந்தமதி வாணனடி
இரைத்த கிணறுதான்டி –தண்ணீர்
ஊறும் கொண்டுவா தோண்டி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக