வியாழன், 30 ஏப்ரல், 2009

அன்பீர்க்குத் தாக்கியதால் ஆங்கு!

மெய்போய் துளைத்திட்ட வில்லம்பால் தன்மகவும்
எய்போல் கிடக்குதென்(று) ஏற்றினாள் -ஐயமற
அன்னையவள் கூறுவமை ஆகினேன் ஐய!உம்
அன்பீர்க்குத் தாக்கியதால் ஆங்கு!

அகரம்.அமுதா

3 கருத்துகள்:

 1. //எய்போல் கிடக்குதென்(று) ஏற்றினாள் //

  எய் போல் என்றால்? சற்றே விளக்க முடியுமா?

  பதிலளிநீக்கு
 2. எய் என்றால் முள்ளம் பன்றி என்று பொருள்படும். சங்கப் பாடல் ஒன்றுண்டு. சரியாக நினைவிற்குவரவில்லை. "எய்போல் கிடக்குதென் ஏறு" என்பது அப்பாட்டின் ஈற்றடி.

  "எந்தையர் கல்நின்றார் என்னை களப்பட்டான்" -என்று தொடங்கி "எய்போல் கிடக்குதென் ஏறு" எனமுடியும் சங்கப்பாடல் ஒன்றுண்டு. அப்பாடலின் தாக்கத்தால் பிறந்ததே இப்பாடல். முள்ளம் பன்றிக்கு முடி முள்போல் நீட்டிக்கொண்டிருப்பதைப்போல தன் மகனின் உடலில் வேற்றரசனின் அம்புகள் துளைத்து வெளியேற முடியாமல் நீட்டிக்கொண்டு நிற்பது முள்ளம் பன்றியின் தொற்றத்தை ஒத்ததாக இருக்கிறது என்று சங்கத்தாய் பாடுவதாக அமைந்தது அந்த பாடல். அதுபோல் நான் எழுதி இடுகைசெய்யும் வெண்பாக்களைப் பார்ப்பவர்கள் என்னைப் பாராட்டி உரைக்கும் சொற்கள் இறகால் ஆகிய அம்பாக மாறி என்னுள் நுழைந்து வெளியேறுங்காட்சியை சங்கத்தாய் உரைத்த முள்ளம் பன்றி உவமைக்கு நேராக்கினேன் அவ்வளவே.

  பதிலளிநீக்கு
 3. விளக்கத்திற்கு மிக்க நன்றி. மிக அருமையான உவமைதான்.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு