புதன், 22 அக்டோபர், 2025

 (ஒரு கொத்தடிமை எப்படியெல்லாம் முட்டுக் கொடுக்கிறான் என்பதைப் பேசுகின்றன இவ்வெண்பாக்கள்)

எத்தனை மன்னிகள்...
ஈடிலாக் கன்னிகள்...
அத்தனை பேர்களும்
அண்ணிகள்... – கொத்தடிமை
கண்ணுக் கிவரெல்லாம்
காதற் கிழத்திகள்...
உண்மையில் ப்ளேபாய்
உதய்!
ராவுக் கொருத்தியை
ராவாய்ச் சுவைக்காமல்
நாவுக் கிதமில்லை...
நள்ளிரவு - நோவுக்குச்
சின்னவர் தேடும்
சிருங்காரப் பட்சிகள்பால்
மின்னல்கள் தோற்கும்
விழிக்கு!
ஆடை விலக்கி
அழகுப் பதுமைகளின்
வாடை படித்துஉதய்
வாழ்ந்திருக்க – மேடைதொறும்
முட்டுக் கொடுப்பதற்கு
முண்டி அடிப்பது
மட்டுந்தான் கொத்தடிமை
மாண்பு!
த்தி தனயனைத்
தானைத் தலைவனைப்
புத்தியில் லாதோன்
புதல்வனைக் – கொத்தடிமைக்
கூட்டத்தார் ஏத்திக்
குதூகலம் கொள்வதெல்லாம்
நோட்டுக்காய்ச் செய்கின்ற
நொட்டு!
அண்ணன் உதயநிதி
அந்தப் புரத்தினிலே
அண்ணிகள்பால் செய்வதெல்லாம்
அராய்ச்சி; - பெண்கள்
கவட்டைக்குக் கீழே
கவிழ்வதில் ஒன்றும்
தவறில்லை; தாள்வீழ்தல்
தப்பு!
தம்மாத்தூண் டுள்ள
தளிரிடைப் பூம்பெண்கள்
எம்மாத் திரமென்றே
எண்ணியுதய் – கும்மிருட்டில்
போட்டானே போடு
புடவைப் புதுக்கிளிகள்
தீட்டான போதும்
திரு!
எழுச்சிமிகு நாயகா
எங்களுதய் அண்ணா
கழுத்துவரைப் பொங்குதடா
காமம்... – இழுத்துக்
கவட்டையில் வைத்த
கடவுள்மேல் குற்றம்;
தவறென்ன உன்மேலா
சாற்று!
அம்மி மிதித்தே
அருந்ததி பார்த்தவள்
ம்மியாய் ஆனால்
மறுதலித்துப் – பொம்மைபோல்
பூங்கிளிபோல் உள்ள
பொதுமகளிர் நாடுவதே
ஓங்கோல் இனப்புகழென்று
ஓர்!
நொங்குண்பான் அண்ணனுதய்...
நோண்டியுண்பான் இன்பநிதி...
அங்குப்பின் மாட்டுபவன்
ஆரேன்றால்... – எங்குலக்
கொத்தடிமை தானே...
குரலை உயர்த்தியவர்
குத்தத்தை முட்டுக்
கொடுத்து!
முட்டுக் கொடுத்தே
முதுகு வளைந்தவன்..
திட்டுகள் வாங்கும்
திருடன்.. – மட்டமாய்ப்
பேண்டீஸில் மட்டுமே
பேரின்பம் காண்பவன்...
காண்டேத்தும் கொத்தடிமை
காண்!

வாழ்த்துப்பா!

 

தூக்கலாய் அல்லாமல்,
தொய்வேதும் இல்லாமல்,
நீக்கமற வள்ளுவத்தில்
நின்றுள்ளான்; - ஆக்கங்கள்
அத்துணையும் தேன்தான்;
அமுத குறள்தெளிய
இத்துணையே போதும்
இனி! 01
முன்னம் எழுதி
முடித்த பனுவலைத்தான்
பின்னும் எளிமை
படுத்தியுள்ளான்; – தென்றமிழர்
உள்ளத்தில் ஏந்தி
உவக்கும் திருக்குறளை
வள்ளுவன் தான்பிறந்து
வந்து! 02
உரைதேடாப் பாட்டை
உலகிற் களித்தான்
நரைகூடா முன்னம்என்
நண்பன்; – கரைகாணாத்
தீங்குறள் ஆழியைச்
சேர்ந்தே கடப்போம்யாம்
ஈங்கிவனே ஓடம் எமக்கு! 03
தோல்,சடை நீக்கிச்
சுளையை வழங்கியுள்ளான்
கால்நடையும் தின்று
களிகொள்ள; – பால்நடை
போடும் கடைப்பாலில்
போட்டான் புதுத்தேனீர்;
ஏடும்பா ராட்டும்
எழுந்து! 04
பொய்யாத் திருக்குறளைப்
புத்தம் பொருட்குறளாய்
நையப் புடைத்து
நமக்களித்தான்; – பையநம்
பாவலன் சங்கர
பாண்டியன் செய்தசெயல்
பூவள்ளிப் பூவணிந்தாற்
போன்று! 05
கடுகைத் துளைத்தேழ்
கடலைஉள் வைத்துக்
கொடுத்தானே வள்ளுவக்
கோமான் – எடுத்திவன்
ஆராய்ந் துவர்ப்பகற்றி
அக்கடுகுள் தூயநன்
நீராழி வைத்தான்
நிமிர்ந்து! 06
வில்லெடுத்தான் ராமன்;
வியந்ததனைப் பாடுதற்குச்
சொல்லெடுத்தான் கம்பன்;
சுகதுக்கம் – எல்லாம்
துறந்தோன் குறளெடுத்தான்;
சுந்தர பாண்டி
குறளுக் கெடுத்தான்
குறள்! 07
பொய்யா மொழிக்குப்
பொருட்குறள் வார்த்தளித்த
அய்யா உனக்கென்
அகவணக்கம் – மெய்யாக
மேனாள் கவிக்கெல்லாம்
மேலான பாவலன்நீ
ஆனானப் பட்டவன்நீ
ஆம்! 08
நொடிப்போழ்த்தில் தீங்குறளில்
நுண்ணறிவி னாலே
இடியாப்பச் சிக்கல்
எடுத்தான் – படிநீ
அறிவும் வளரும்
அகமும் மலரும்
குறிக்கோள் அடைவாய்
குளிர்ந்து! 09
கோடிஉரை கண்ட
குறளுக்குப் பூங்குறளால்
நாடிஉரை நல்கிய
நண்பனே! – கூடியுனை
வாழ்த்தட்டும் ஊருலகம்
வாழ்த்தட்டும் வானவரும்
வாழ்த்தட்டும் வள்ளுவனும்
வந்து! 10

கதையே வெண்பாவாக...



நண்பன் -
பெண்பார்க்கப் போனாயே
போவார் வருவார்தம்
கண்பார்க்கு மாறுநற்
கட்டழகா? – பெண்ணைப்
பிடிச்சிருக்கா? உன்னைப்அப்
பெண்ணிற்கும் கூடப்
பிடிச்சிருக்கா? இல்லையா?
பேசு!
பெண்பார்க்கச் சென்றவன் -
தன்னந் தனியழைத்துத்
தாவணிப் பெண்ணவள்
கன்னத்தைக் கிள்ளிக்
கடிந்தபடி – உன்போலே
ஒல்லியனே வேண்டாம்
உதைதாங்க மாட்டாய்நீ
செல்லுக! என்றாள்
சிரித்து!
பாக்கத்தான் ஆள்கொஞ்சம்
பஞ்சை; அடிஉதையின்
தாக்கத்தை நன்றாகத்
தாங்குவேன்; – வீக்கம்
வெளியே தெரியாது
வேண்டான் எனாதே
கிளியே!என் றேன்கெஞ்சிக்
கேட்டு!
என்னால் இனி ரிஸ்க்
எடுக்க இயலாது
சொன்னால்கேள் என்றாள்நான்
சோர்வுற்றேன்; – பின்பென்னைத்
தேற்றி ஒருவாறு
தேம்பி அழாய்என்று
போற்றி அனுப்பிவைத்தாள்
பூ!

செவ்வாய், 21 அக்டோபர், 2025

தன்படப் பித்து!


பாம்பின் கூற்று...
யார்படம் நல்லா
இருக்குதுன்னு பாத்திடுவோம்;
ஓர்படம் நானெடுக்க
ஒன்றெடுநீ; – சேர்ந்தெடுக்கும்
தன்படம் மட்டும்
தவறாகப் போனதுன்னா
பின்விளைவு மோசம்
பிளாய்!
செல்பிமோ கத்தால்நீ
செத்து விழப்போறே
நல்லப்பாம் பென்னோட
நஞ்சாலே – மெல்லமெல்லப்
பக்கத்தில் வந்து
படமெடுக்கும் ஆசையில
நெக்குருகிப் போகிறநீ
நெஞ்சு!
உன்படம் தான்டா
உனக்கொசத்தி; நானெடுக்கும்
என்படம் தான்டா
எனக்கொசத்தி; – தன்படத்தை
என்னோ டெடுங்க
எனைநெருக்கி வாராதே
உன்னோ டெனக்கில்லை
ஒட்டு!
படைநடுங்கு மன்றோ
படம்நான் எடுக்கத்
தொடைநடுங்கு மன்றோநான்
தோன்றக் – கடைவிரிச்சுச்
செல்பி எடுக்கும்
தெகிரியம் கொண்டஉன்மேல்
பல்பதிச்சு ஊத்துகிறேன்
பால்!



வெடிச்சது குத்தமாடா?

 

குற்றவாளி 1:-
பொட்டு வெடிதான்டா
போட்டேன்; அதுக்காக
ஜட்டியொடு உக்கார
வச்சிட்டான்; - சட்டத்தின்
முன்னால் நிறுத்திட்டான்;
முன்கதையை மாத்திட்டான்;
தண்டனை தந்துவிட்
டான்!
குற்றவாளி 2:-
மூனுநாள் உள்ளவெச்சி
மொத்தகதை மாத்திட்டான்;
ஏனுன்னு கேட்டதுக்கு
எத்துவிட்டான்; - நானுன்னைப்
போல வெடிக்கலே;
வேடிக்கை தான்பாத்தேன்;
ஆளைத்தூக் கிட்டான்
அதுக்கு!
குற்றவாளி 1:-
சுருள்காப்புத் துப்பாக்கி
சுட்டதுதப் பென்று
பொருள்காட்சி ஆக்கிட்டான்
போலீஸ்; - தெருசாட்சி
வந்துசொல்லிக் கேக்கலே;
வாண்டுன்னும் பாக்கலே;ஈ(து)
எந்தஊர் ஞாயம்
எலே!
குற்றவாளி 2:-
இப்படித்தான் கேட்டேன்
இடுப்பிலொரு குத்துவிட்டான்;
அப்படிப்போய்க் குந்தென்று
அதட்டிவிட்டான்; - உப்புபெறாச்
சின்ன விஷயத்தை
ஊதிப் பெரிசாக்கி
என்னை அடைச்சிட்டான்
இங்கு!
குற்றவாளி 1:-
ஆனை வெடிபோட்ட
ஆளைப் பிடிக்கலே;
வானவெடி வைத்தவன்
மாட்டலே; - நானெடுத்து
மூனு வெடித்திரியை
ஒன்றாக்கித் தீவைத்த
சீனிவெடிக் காடா
சிறை!?
குற்றவாளி 2:-
ஊசிவெடி வெச்சதற்கும்
ஓலைவெடி போட்டதற்கும்
நாசிவேர்க்க வந்துநின்றான்
நாங்கெடச்சேன்; - பேசிவெச்சி
வானவெடி போட்டவனை
வையம் பொளந்தவனை
ஏனரஸ்டு பண்ணல
இன்ஸு!?
குற்றவாளி 1:-
தின்றவன் தப்பிப்பான்;
நோண்டினவன் சிக்கிப்பான்;
இன்றுநேற் றல்ல
இதான்நிலைமை; - ஒன்றுதான்
காவலர் நாட்டமும்
கள்வரின் ஆட்டமும்;
சாவதெலாம் ஏழைகள்
தான்!
குற்றவாளி 2:-
தெக்குத் தெருவில்
சினேகிதி தன்வீட்டு
முக்குல் வெடித்தாள்
முனைகிள்ளி; - டக்குனுபோய்க்
கஸ்மால கான்ஸ்டபிள்
கைதுபண்ணிப் போட்டுட்டான்
புஸ்வாணத் திற்காய்ப்
புழல்!
குற்றவாளி 1:-
பொண்ணுன்னும் பாக்காம
பூவுன்னும் பாக்காம
கண்கலங்கி நிற்பதையும்
காணாம - என்ஆளு
கம்முன்னு காதலாய்க்
கைமீது வெச்சிருந்த
கம்பிமத் தாப்புக்காய்க்
கைது!
குற்றவாளி 2:-
ஆர்க்கும்காட் டாமல்
அடைப்பானோ? கொண்டுபோய்ச்
சீர்திருத்தப் பள்ளியில்
சேர்ப்பானோ? - ஊர்பார்க்க
நம்மோட போட்டோவை
நாலிடத்தில் வைப்பானோ?
கம்மனாட்டிக் கென்ன
கடுப்பு!?
குற்றவாளி 1:-
சாட்சிகள் வேண்டாமாம்;
ஜாமின் கிடையாதாம்;
காட்சிப் படுத்தாமல்
கைதுதாமாம்; - பூட்ஸ்மிதி
வாங்கத்தான் வேண்டுமாம்;
வாய்திறக்கக் கூடாதாம்;
நாம்செத்தோம்; வாய்தா
நகி!
குற்றவாளி 2:-
குண்டாஸில் வந்த,
கொலைகேஸில் உள்வந்த,
சண்டாளர் கூடநமைச்
சாடுகிறார்; - உண்மையில்நாம்
அம்மாம் பெருங்குற்றம்
அப்படி என்னசெய்தோம்?
இம்மாம் பெரிய
எதிர்ப்பு!?
குற்றவாளி 1:-
குற்ற உணர்வூட்டிக்
கேஸைநம் மேலேற்றிச்
சுற்றம் தவிக்க
ஜுரம்கூட்டிக் - கொற்றவர்கள்
கூறியதைக் கேட்கவைத்துக்
கொள்கைகளை ஏற்கவைத்துப்
பீறிடவைப் பான்நாட்டுப்
பித்து!
குற்றவாளி 2:-
ஆலைகள் மூடமாட்டான்;
ஆரண்யம் காக்கமாட்டான்;
வாலைக் கனிமவளம்
வைக்கமாட்டான்; - ஓலைவெடி
ஒன்னுரெண்டு போட்டா
ஒலகம் அழியுமென்பான்;
என்னடா சூழலியல்
இஃது!?
குற்றவாளி 1:-
சரக்கடிக்கக் காலநேரம்
சட்டத்தில் இல்லை;
சரவெடிக்குப் போட்டான்பார்
சட்டம்; - வரவரநம்
சின்ன மகிழ்ச்சியைச்
சீதச் சுதந்திரத்தைக்
கொன்றுவிட்டு ஆடுகிறான்
கூத்து!
குற்றவாளி 2:-
அவனப்பங் காசையா
ஆட்டயப் போட்டோம்?
எவனப்பங் காசை
எடுத்தோம்? - சிவனேன்னு
வீட்டுல துட்டுவாங்கி
வீதி யிலவெடிச்சா
மாட்டுவானா கையில்
விலங்கு?
குற்றவாளி 1:-
ஏட்டைய்யா பாக்குறான்
ஏத்தமா நோக்குறான்
கேட்டுட்டான் போலநம்
கேலிகளை; - வாட்டமா
மூஞ்சிய வெச்சிக்கோ
முன்னவரான் மெச்சிக்கோ
வீங்கிருமில் லேன்னா
விலா!
அகரம் அமுதன்

 நறுக்குத் தெறித்தாற்போல்

நற்கவிதை செய்து
கிறுக்குப் பிடித்திடச்
செய்தீர்; - வறுத்தெடுத்த
வேர்க்கடலை போலே
விரும்பிப் புசிப்பதற்குச்
சீர்தொடுத்த தன்மை
சிறப்பு! 01
வாய்விட்டுப் பாடும்
வகையில் வரியாவும்
பாய்போட்டு நாவில்
படுத்திருக்க - ஆய்ந்தெடுத்த
சொல்லால் மனதில்
சுகப்போதை ஊட்டியுளீர்
கல்லல்ல உம்பாட்டு
கள்! 02
பூவா? புதுத்தேனா?
பொன்னா? பொழில்மீனா?
தீவா? திசைதானா?
செவ்வானா? – நாவா?அந்
நாவைகும் தாலாட்டா?
நற்றமிழின் கையூட்டா?
பாவையே! யாதுனது
பாட்டு? 03
சந்தனத்தில் வார்த்தையையும்
சவ்வாதில் சொற்களையும்
கந்தமுறத் தோய்த்துக்
கவிநெய்தீர் – அந்திவரை
தாங்காத மோகத்
தணல்குளிக்கும் மங்கையைப்போல்
தூங்காது நூல்குடித்தேன்
தோற்று! 04
முப்பதுநூல் போட்டு
முடித்த புலவனும்
இப்பதுமை நூலுக்
கிவண்தோற்பான் – அப்படியோர்
ஆன்ற புலமை
அமைந்திடப் பெற்றுள்ளார்
சான்றோர்வாய் வாழ்த்தட்டும்
சார்ந்து! 05
அற்பனுக்கு வாழ்க்கா
அரிதான நல்லபலக்
கற்பனைகள் வாய்த்தஇளம்
காரிகையே! – விற்பனைக்குக்
காணிகள் கிட்டும்;
கவிதைகள் கிட்டுமா?
ஆணிப்போன் தானா
அவை? 06
பாவெனும் அந்தப்
பழுதடைந்த வீட்டைப்பெண்
பூவெனும் மங்கை
புதுக்கினார் – ஆவின்பால்
காய்ச்சினார் நெய்விளக்கின்
கண்சுடர் ஏற்றினார்
பாய்ச்சினார் ஆனந்தம்
பார்! 07
வெண்பாவை நல்ல
விருத்தத்தை ஐக்கூவைப்
பெண்பாவை தீட்டிப்
பெயர்பெற்றார்; - கண்பாவை
போலும் அழகழகாய்ப்
பூத்த கருத்தெல்லாம்
பாலும் பழரசமும்
பார்! 08
இதுகவிதை என்றே
இயம்பும் படியாய்ப்
புதுக்கவிதை நன்றே
புனைந்தார் - எதுகவிதை
என்பவர் கண்டால்
இதயம் இழந்திடுவார்
பொன்பெறும் அன்றோ
புனைவு! 09
தொட்டபொருள் எல்லாம்
துலங்கும் படிஎழுதும்
கெட்டிக்கா ரப்பெண்
கிடைத்துள்ளார்; – பட்டிதொட்டி
பாராட்டை நல்கினால்
பற்பல நூல்படைப்பார்;
சீராட்டை ஆழ்மனமே
சிந்து! 10

சினிமா சாங்!


சிங்குறவன் சங்கேறி
சீவிக்கும் சிங்காரி
முங்குறவன் வாய்பொழிவேன்
மும்மாரி; – இங்குநான்
உங்களுடன் இல்லாட்டா,
உள்ளத்தில் நில்லாட்டா,
சங்குதான்; நான்சினிமா
சாங்! 01
பாடிட வாயெதுக்கு?
ஆடிடக் காலெதுக்கு?
பாடிய ஷேக்பண்ண
பீட்டிருக்கு; – நாடிநரம்பு
எல்லாம் முறுக்கேறும்
நல்லாக் கிறுக்கேறும்
செல்வோம் செமதூரம்
சேர்ந்து! 02
கோட்டையில் ஏத்துவேன்;
ரூட்டையும் மாத்துவேன்;
பேட்டையின் ஸ்லாங்கும்நான்
பேசுவேன்; – வாட்டுற
சோகத்த ஓட்டுவேன்
சொப்பனம் காட்டுவேன்
தேகத்தில் ஊட்டுவேன்
தெம்பு! 03
பத்துப்பாட் டெல்லாம்
பழையபாட்டு; இன்றில்லை
குத்துப்பாட் டில்லாமல்
கோலிவுட்; – மொத்தத்தில்
ஹீரோவே நான்தான்;
கிறுக்கேத்தும் பீட்டுக்கு
ஹீரோயின் ஆடினா
ஹிட்டு! 04
காதுல பூப்பூக்கும்
காத்துல நான்வந்தா;
தீதுகள் தீர்ப்பேன்
செவிதந்தா; – ஓதுவார்
ஓதாத போதும்நான்
உள்ளத் தொலிப்பேனே;
மோதாதா மௌனத்தின்
மோட்! 05
தூங்காத கண்ணுக்குத்
தூக்கம் தருவிப்பேன்;
தாங்காத நெஞ்சின்
தழும்பழிப்பேன்; – நீங்காத
பாரத்தப் போக்கும்
படப்பாட் டெனைப்போல
காரம்நீக் காதே
கவி! 06
நாட்டில் கவியெழுதி
நாலணா பாத்தவனைக்
காட்டினாத் தேவலைநீ
காட்டப்பா! – பாட்டிலே
மெட்டில் வரிபோட்ட
துட்டில் வரிகட்டும்
கெட்டிக் கவிகளைப்போய்
கேள்! 07

வெள்ளி, 17 அக்டோபர், 2025

 வெண்பா!

பிள்ளை அறையினிலே
பேச்சுக் குரல்கேட்டு
வெள்ளை மனத்தப்பன்
வேர்த்தனன்; - தள்ளிநின்று
காது கொடுத்துக்
கவனம் செலுத்தினன்
ஏதுதான் பேசுகிறான்
என்று! 1
பையன் கடவுளிடம்
பையவே வேண்டினான்
ஐயனையை அப்பத்தாள்
அல்லலின்றி – வையகத்தில்
நன்றிருக்கத் தாத்தா
நலமாகப் போய்வருக
என்றிறையைக் கேட்டான்
இருந்து! 2
தன்பிள்ளை ஆண்டவனின்
தாள்கள் வணங்குதல்
நன்றென்று தந்தையும்
நம்பினான் – என்றாலும்
உள்ளுக்குள் ஏதோ
உறுத்த உறங்கினான்
நள்ளிரவும் போனது
நன்கு! 3
மாரடைப்பில் தாத்தா
மரணம் அடைந்துவிட
நீரடைந்த கண்ணொடுஊர்
நின்றிருக்க – மாரடித்துக்
காதே கிழயவப்பன்
கத்திப்பின் தேறினான்
ஏதேச்சை யாய்நிகழ்ந்த
தென்று! 4
இன்றிரவும் பிள்ளை
இறைவ னிடம்வேண்டச்
சென்றுமறைந் தப்பன்
செவிமடுத்தான்; – அன்னைதந்தை
நன்றாக வாழ்க
நமதப்பத் தாவுக்கு
நன்றியென் றானே
நலிந்து! 5
அப்பனை நன்றாக
அச்சம் பிடித்தாட்ட
இப்பொழுது தூக்கம்
இலாதொழியச் – செப்பியவாறு
அப்பத்தா செத்தொழிய
அந்தோ பரிதாபம்!
குப்பென வேர்த்தார்
குமைந்து! 6
இன்றிரவு தன்பிள்ளை
யாரைக் குறிப்பிட்டு
நன்றிசொல்வான்? என்றே
நடுங்கினான்; – சின்னவனும்
அப்பொழுது வேண்டினான்
அன்னை நலம்வாழ்க
அப்பனுக்கு நன்றியென
ஆர்ந்து! 7
மாவச்சம் தோன்ற
மருத்துவரைப் போய்ப்பார்த்தான்;
நோவெதுவும் இல்லையென்றான்
நுண்ணியனும்; – சாவச்சம்
வாட்டி வதைக்க
வருத்தத் துடனேதன்
வீட்டை அடைந்தான்
விரைந்து! 8
காலையில் வந்த
கணவன் அணைத்தழுதாள்
மாலையிட்ட மங்கை
மனமுருகி; – வேலையால்
செத்த கதைசொல்லிச்
செவ்வரிக்கண் சிந்தினளே
மொத்தமடங் கிற்றிவன்
மூச்சு! 9



மூலக்கதை!
திடீர்னு பையன் ரூம்ல ஏதோ
சவுண்டு கேக்குதுன்னு அப்பா அந்த
பக்கம் போறாரு. உள்ள பார்த்தா
பையன் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கான்..
"அம்மா, அப்பா & பாட்டி நல்லா இருக்கணும்..தாத்தாவுக்கு நன்றி"னு.
என்னடா இவன் வித்தியாசமா
வேண்டிக்கிட்டு இருக்கான்னு அவன்
அப்பாவுக்கு ஒரு டவுட் இருந்தாலும்..
ஒரு சந்தோஷம் கடவுள் பக்தியா
இருக்குறான்னு !
"மறுநாள் காலையில தாத்தாவுக்கு மாரடைப்பு வந்து இறந்துட்டாரு "..
உடனே இதை யோசித்து பார்த்த அப்பா ஒருவேளை இது எதேச்சையா நடந்திருக்கும்னு நினைச்சுக்கிட்டாரு.
மறுநாள் நைட்டும் பையன் ரூம்ல
அதே சவுண்ட் கேட்குது !
அங்க பையன் அம்மா & அப்பா நல்லா
இருக்கணும்..பாட்டிக்கு நன்றினு
சொல்லிட்டு இருக்கான்.
மறுநாள் காலையில வரைக்கும்
வெயிட் பண்ணி பார்த்தா..
"பாட்டியும் இறந்து போய்ட்டாங்க"
அப்பாவுக்கு ஒரே பயம். இன்னைக்கு
நைட்டு இவன் என்ன சொல்ல
போறான்னு ஆர்வத்தோட பையன் ரூம்ல கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சி
நின்னுட்டு இருக்குறான்‌‌.
இப்போ பையன் " அம்மா நல்லா
இருக்கணும் & அப்பாவுக்கு நன்றினு
சொன்னதும் ..இவனுக்கு வியர்க்க
ஆரம்பிச்சிட்டது
நைட் வீட்ல சரியா தூங்க முடியாம
முழிச்சிட்டு இருக்கான்.‌. இனி இத
இப்படியே விடக்கூடாதுன்னு உடனே
டாக்டர் கிட்ட போயிட்டு உடம்பை செக் பண்ணிக்குறான்..
டாக்டரும்.. " நீங்க நல்லா தானே
இருக்கீங்க உங்களுக்கு ஒன்னும்
ஆகாதுனு" சொல்லி அனுப்புறாரு..
வீட்டுக்கு வந்ததும் பொண்டாட்டி ஓடி
வந்துட்டு நைட்டு எங்க போனீங்கனு
பயத்தோட கேட்குறா..
" ஏன்‌ என்னாச்சுனு இவன் கேட்க ? "
நம்ம தோட்டக்காரன் மர்மமா செத்து
போயிட்டான்னு சொல்லுறா...
" என்னடி சொல்றனு ? ஒரு பக்கம்
கோவம் ..இன்னொரு பக்கம் உயிர்
பிழைச்சோம்னு சந்தோஷம்

 வாழச் செலவு

மிகக்குறைவு; மற்றவர்போல்
வாழத்தான் தேவை
மலையளவு; - ஆழமாய்ச்
சிந்தித்துச் செய்வீர்
செலவு; செலவுமிகின்
வந்தவழி போகும்
வரவு!

இன்பனுக்குச் சுடலையின் இன்னுரை!

 இன்பனுக்குச் சுடலையின் இன்னுரை!

சுடலையின் கூற்று:-
அப்பன் தயவில்நான்
ஆட்சிக்கு வந்துட்டேன்,
இப்பக் கடும்போட்டி
ஏராளம், – இப்பவேநீ
கூத்தாடி ஆனால்பின்
கோட்டை வசமாகும்,
நாத்துடுக்காப் பேசி
நடி!
இன்ப நிதியே!
எனது பெயரனே!
உன்நடிப்பால் நீயசத்து
ஊருலகைப் – பின்புனக்குச்
சிக்கலிருக் காது
சிறிதும்; மகிழ்வாரே
மக்கள் அரியணையில்
வைத்து!
எத்தனை சீமான்
எழுந்தாலும் நம்முடைய
கொத்தடிமைக் கூட்டம்
குறையாது; – புத்திவரப்
பெற்றுவிட்டால் பின்நாம்
பிழைப்ப தரிதாகும்;
கற்றுநடித் துன்திறத்தைக்
காட்டு!
உரைகவர்ச்சி ஒன்றும்
உதவாது; செல்வம்
அரைகவர்ச்சி ஆகும்
அதனால் – திரைக்கவர்ச்சி
மட்டும்தான் நம்மைப்
பதவியில் வைத்திருக்கும்
தொட்டு நடிப்பைத்
தொடர்!
ஒப்பனுக்குப் போட்டியாய்
உள்ளான் விஜய்வளர்ந்து
ஒப்பனை பூசியே
உக்கிரமாய்; – இப்பொழுது
மக்களும் ஆங்கவன்
பக்கம் விரைகின்றார்
நக்கல் அடித்து
நமை!
தாத்தன் சுடலைசொல்
தட்டாப் பெயரனாய்ப்
பூத்து நடிப்புலகில்
போந்தாயேல் – காத்துனது
பக்கம் அடிக்கும் ;
பதவி சுகம்கிடைக்கும்;
மக்கள் நடப்பார்
மதித்து!
கொத்தடிமை என்றொரு
கூட்டமுண்டு; நாமவரின்
புத்திக்குள் நன்றாய்ப்
புகுந்துள்ளோம்; – பித்துப்
பிடித்தவக் கூட்டத்தை
பின்நீயும் ஆள
நடிப்புத் துறையுதவும்
நம்பு!
அகரம் அமுதன்